பக்கம்:தொழில் வளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

215


கெஜமாக இருந்த ஏற்றுமதி 1958-ல் 62.5 கோடி கெஜமாகக் குறைந்து விட்டது. சீன நாட்டோடு, நடைபெற்ற பெரு வியாபாரம் மங்கத்தொடங்கியது. வெளி நாடுகளில் தத்தம் நாட்டுத் தொழிலை வளர்க்கவேண்டு.மென்ற ஆர்வமும் பிறநாடுகளில் வாணிபப் போட்டி நிலையும் இந்த வெளிநாட்டு வாணிப மந்தத்துக்குக் காரணமாகலாம்; இந்திய அரசாங்கம் இதைத் தவிர்க்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளி நாடுகளில் வாணிபக் குழுக்களை அனுப்பி, நம் கைத்தறிகளைப் பற்றிப் பிரசாரமும் விளம்பரமும் செய்தல் வேண்டும். மற்றும். ஆடை ஏற்று. மதியில் கைத்தறி ஆடைகளுக்கெனத் தனியான மதிப்பிடும் முறையும் பிறநிலைகளும் அமைத்து இத்துறையை வளர்க்க அரசாங்கத்தார் தக்க பெருமுயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புடியே கைத்தறி ஆடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சங்கங்களும், மக்களும் இன்று இவ்வகை ஆடைகளைப் பெரிதும் விரும்பும் அமெரிக்க, மேற்கு ஜெர்மனி நாடுகளின் தேவைகளை அறிந்து அவர்தம் மனநிறைவுக்கேற்ற நல்ல "வண்ண ஆடைகளையும், பிறவற்றையும். உண்டாக்கித்தர முயலி வேண்டும். வாணிபத்துறையில் கையாளவேண்டிய நேர்மை முறையினையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உண்டான ஒருவகைக் கைத்தறி ஆடைக்கு அமெரிக்காவில் உண்டான பெருங்தேவையினையும் அதைப் பயன்படுத்திக்கொண்டு தவறான. வகையில் நம். நாட்டுமக்கள் வாணிபம் செய்ய நினைத்து நிலை கெட்டுப். பெருவாணிபத்தைக் கெடுத்துக் கொண்டதையும், நாம் மறப்பதற்கில்லை. எனவே எப்போதும்-சிறப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/218&oldid=1382271" இலிருந்து மீள்விக்கப்பட்டது