பக்கம்:தொழில் வளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216.

தொழில் வளம்


ஆலை முதலிய போட்டிகளும், வெளி நாட்டு வியாபாரப் போட்டிகளும் மிக அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் கைத்தறி நெசவாளர்கள் நேர்மையும் தன்மையும் கொண்ட நல்ல திறமான நிலைத்த வண்ண்ங்களோடு கூடிய ஆடைகளை நெய்தே அனுப்பவேண்டும். உள் நாட்டிலும் வண்ணங்கள் நிலைக்காத வகையிலும் நெருக்கம்மில்லா நெசவு வகையிலும் போட்டி மனப்பான்மையில் குறைந்த விலையில் ஆடைகளைத் தயாரிக்க நினைக்கின்றனர். இதுவும் ஒருவகையில் வருந்தத்தக்கதேயாகும். அந்த வாணிபத்துறையில் இந்நிலை வருந்தத்தக்க ஒன்றாகும். இந்தியநாட்டுப் பல்வகை ஏற்றுமதிகள் இந்தச் சீர் கேடான முறையில் பாதிக்கபட்டதை அவ்வப்போது வெளியாகும் நாட்டுச் செய்திகள் மூலம் நன்கு அறிந்து கொள்ளுகிறோமன்றோ ! எனவே ஆடை வகையில், இக் குறைபாடு நேராதவகையில் நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும். இந்தத்துறையில் தமிழ்நாட்டுக் கைத்தறிக் கூட்டுறவுச் சங்கம் சிறக்கக் குறையற்ற வகையில் பணியாற்றுகின்ற்து எனலாம். நிலைத்த வண்ணமுடையதாகவும் நல்ஊட்டமுடைய .நெசவு பெற்றதாகவும் சிறந்த ஆடைகள் நெய்வதில் தமிழ் நாட்டுக் கூட்டுறவுச் சங்கம் தன் அடிப்படைச் சங்கங்களை வற்புறுத்தி அரிய ஆக்கப் பணியினைச் செய்கிறது. மற்றும் கடந்த சில ஆண்டுகளில் எத்தனையோ வ்கையான பல்வேறு வண்ணங்களாலும், திறனாலும் நெய்யப்பட்ட-வெளிநாட்டு மக்களையும் கவரத் தக்க - பல ஆடைகள் நெய்வதை நாடெங்கும் நடை பெறும் கண்காட்சிச்சாலைகள். நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றும் கைத்தறி நெசவாளர் சங்கத்தலைவர்களும் அத்துறையில் வல்ல பிறரும் இந்திய அர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/219&oldid=1400672" இலிருந்து மீள்விக்கப்பட்டது