பக்கம்:தொழில் வளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில் - கைத்தறி

217


சாங்கத்தை இரந்து கேட்டுக் கொள்வது ஒன்று தான் அதுதான் வேட்டி புடவைகளை நெய்யும் வேலையை முழுக்க முழுக்கக் கைத்தறியின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது. அப்படிப் பிரித்து வரையறை செய்து விட்டால் இன்று ஆலைகள் வழி அவர்கள் பெற்றுவரும் ‘செஸ்’ கூடவேண்டாம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். உலகெங்கணும் பல நாடுகளில் இத்தகைய முறைகள் கையாளப் பெறுகின்றன எனவும் அவர்கள் காட்டுகிறார்கள். எனினும் இந்திய அரசாங்கம் 1950ல் ஒதுக்கிய ஒரு சில ரகங்களைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. துணி ஆலை முதலாளிகளின் ஒத்துழைப்பும் அவர்தம் பொருளாதார வளர்ச்சியும் நாட்டு வளர்ச்சிக்குத்தேவை என்று கருதுவதனாலோ அன்றி ஏனோ இந்திய அரசாங்கம் இந்த வரையறை செய்ய இதுவரை முற்படவில்லை. இனியும் செய்யுமா என்பது ஐயத்திற்குரியதேயாகும். எனவே கைத்தறி நெசவாளிகள் — சிறப்பாகத் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் — தம் உழைப்பின் திறத்தாலும் நேர்மையாலும் உள்ள நிலையிலே வாழ்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டியவர்களே. மேலும் புதுப்புதுவரிகள் உண்டாகின்ற இக்காலத்தில் இக்கைத்தறித்தொழிலுக்கு மத்திய அரசாங்கமோ மாநில அரசாங்கமோ புதுவரி ஏதாவது இட்டு, உள்ள தொழிலை நிலை குலையச் செய்யாத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென இத்துறையில் வல்லவர்களும் தமிழ் நாட்டுத் தலைவர்களும் இரு அரசாங்கங்களிடத்தும் அடிக்கடி தொடர்பு கொண்டு வற்புறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கைத்தறி மங்கினால் மக்கள் வாழ்வு மன்றி அந்நாட்டின் பெருமையைக் காப்பாற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/220&oldid=1382286" இலிருந்து மீள்விக்கப்பட்டது