பக்கம்:தொழில் வளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தொழில் வளம்


றும் ஒரு பழம்பெரும் தொழில் வளமும் கெடும் என்ற நிலையை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

மற்றொரு வழியிலேயும் கைத்தறியின் ஆக்கத்துக்கு இடையூறு வருகிறது என உணர்கின்றனர்–அதுதான் விசைத்தறி வளர்ச்சி. கனுங்கோ கமிட்டியின் சிபாரிசின்படி 35,000 விசைத்தறிகள் இரண்டாம் திட்ட இறுதிக்குள் நாட்டில் அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது இன்றும் நிறைவு பெறவில்லை போலும். எப்படியாயினும் விசைத்தறி வளர்ச்சி கைத்தறி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையேயாகும் என்பதை உணர்ந்து அதற்கு வேண்டிய துறையில் செலாற்றத் தலைவர்கள் முயல்கின்றனர். இத்தகைய நிலைகளில் கைத்தறி ஆலை, அரசாங்கம் என்ற மூன்று துறையிலும் உள்ள தலைவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் நல்ல முடிவினைக் காண முயலவேண்டும். இன்றேல் ஒன்றை ஒன்று போட்டி மனப்பான்மையால் குறைக்கவும் குறைகூறவும் முயல்வதோடு இருவேறு வகைப்பட்ட மக்களினத்துக்கு இடையிலே கைத்தொழிலாளர்—ஆலை, முதல்வர் இடையிலே — தேவையற்ற கசப்பு மனப்பான்மையே வளர்ந்து நாட்டு வளர்ச்சிக்கும் இணைப்புக்கும் கேட்டினை விளைவிக்கும். கைத்தறித் தொழிலாளர் பெரும்பாலோர் தென்னாட்டில் உள்ளனர்; ஆலை முதல்வர்களில் பெரும்பாலோர் வடநாட்டில் உள்ளனர். எனவே இந்த இருதொழிலுக்கும் இடை யில் சிறு மாற்றங்களோ மாறுபாடுகளோ உண்டானால் அவற்றை இன்றைய நாட்டு நிலையில் வேறு துறைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். எனவே ஆலைக்கும் கைத்தறிக்கும் ஒருமை உணர்வு வளர்க்க வேண்டுவதே அரசாங்கத்தின் முதற் கடமை. இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/221&oldid=1382296" இலிருந்து மீள்விக்கப்பட்டது