பக்கம்:தொழில் வளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

219


விடுத்துச் செல்வர்களென்று ஆலை முதல்வர்களையோ, பெரும்பான்மையினர் என்று கைத்தறியாளர்களையோ அரசாங்கம் ஆதரிக்க நினைத்தால் தவறாக முடியும். கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையில் ஓரளவு நேர்மையும் பொறுப்பும் உள்ளன என்பதை உணரவேண்டுமெனக் கருதுகின்றேன். அவர்கள் விருப்பின்படி வேட்டி, புடவைகளை உற்பத்தி செய்யும் முழுப்பொறுப் பினை அவர்கள் வசம் ஒப்படைத்து இன்றைய ‘செஸ்’ முறையையும் நிறுத்தி ஆலையாளருக்கும் உதவி, இருவரையும் தோளோடு தோள் சேர்த்துச் செல்ல அரசாங்கம் உதவுமாயின் நாட்டில் பல நல்ல செயல்கள் மேலும் நிகழ வாய்ப்பாகும்.

இயந்திர சக்தி பெருகிக்கொண்டு வருகின்ற காலத்தில் கைத்தறி நெசவுக்கும். இடமுண்டா என்ற வினா மிகவும் சிக்கலானது. எவ்வாறு இருப்பினும் சில சிறப்பு ரகங்களைப் பொறுத்த வரையில் கைத்தறியின் மூலமாகத்தான் அவைகளை உற்பத்தி செய்யமுடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சாதாரண ரகங்களைப் பொறுத்த வரையில் இயந்திரப் போட்டி மேலும் மேலும் வலுப்பட்டுக் கொண்டு போகும் என்பதையும் நாம் உணரவேண்டும். தற்போது இருக்கக் கூடிய நிலையில் இலட்சக்கணக்கான நெசவுத்தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் கொடுக்கக் கூடிய நிலை இல்லாவிட்டாலும், மேலும் மேலும் இயந்திரத் தொழில்கள் வளருகின்ற காலத்தில் இத்தொழில்களில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் இடம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. அதுவுமல்லாமல் இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறை மக்கள் கைத்தறி நெசவுத் தொழிலைத் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், நெசவாளர் குடும்பத்திலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/222&oldid=1382306" இலிருந்து மீள்விக்கப்பட்டது