பக்கம்:தொழில் வளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தொழில் வளம்


 இளைஞர்கள். படித்துக் கல்வியறிவு பெற்றவர்களாக முன் வரும்போது இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்துவார்களா என்பதையும் நாம் எண்ணவேண்டியிருக்கிறது. சிறிது சிறிதாகக் கைத்தறிகளுக்குப் பதிலாக விசைத்தறிகளை உபயோகப்படுத்த ஆரம்பிப்பது சிறந்ததென்கின்ற கருத்துப் பிரச்சினையே, இந்த அடிப்படிையில் நோக்குகின்றவர்கள் மத்தியில் இப்போது பரவி வருகிறது.இவ்வாறு விசைத்தறிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் அதன் பயனாகக் கைத்தறி நெசவாளர்கட்கு வேலை இல்லாமற் போய் விடும் என்ற அச்சம் ஏற்படலாம். ஆனால் விசைத் தறிகளின் அமைப்பைக் கைத்தறி நெசவுக் கூட்டுறவுச் சங்கங்களின் அடிப்படையில் ஏற்பாடு, செய்தால் அதன்மூலம், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலையில்லாது போகின்ற நிலையையும், தடுக்கமுடியும். அதே சமயத்தில் விசைத்தறி உபயோகிப்பதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய அதிக ஊதியத்தை ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாக் கைத்தறி நெசவாளர்களும் பங்கிட்டுக்கொள்ள முடியும் என்கின்ற நிலையும் ஏற்படலாம். இதுபற்றி, பழைய கருத்துக் களிலேயே நிலைத்து, தொழிலைத் தேங்கச் செய்துவிடாமல், பார் த்துக்கொள்வது அவசியமென்பதை எல்லோரும் உணரவேண்டும். இதற்கிடையில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயருவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும். எடுப்பது அவசியமாகின்றது. இந்த அடிப்படிையில்தான் பல திட்டங்கள் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து முன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அப்பணிகள் நடை பெற இருக்கின்றன. ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/223&oldid=1400673" இலிருந்து மீள்விக்கப்பட்டது