பக்கம்:தொழில் வளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தொழில் வளம்


வேளை தமிழ்நாட்டில் இதன் வெப்ப நிலைக்கேற்பதேவை இல்லாத ஒரு பொருள். என்ற காரணத்தால் இத்தொழிலை யாரும் மேற்கொள்ளவில்லை போலும், எனினும் தமிழ்நாட்டில் எரிமயிரை மற்றவற்றுடன் சேர்த்துப் பட்டினும் மயிரினும் பருத்தி நூலிலும், நெய்த வகைகளுடன் எண்ணியே. அன்றைய சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. சிலர் எலி மயிர்ப் போர்வை, என்று பாடங்கொண்டு தமிழ்நாட்டில் பழங்காலத்தில் பேரெலிகளின் மயிர்களைக் கொண்டு போர்வை செய்தார்கள் எனவும் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர். இக்கருத்து மேலும் ஆராய்தற்குரிய ஒன்று எனக் கொள்ளலாமேயன்றி இது உண்மையென்றாே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து என்றாே. கொள்ளமுடியாது: இங்கு நமக்கு இந்த ஆராய்ச்சிகளெல்லாம் இன்று தேவையில்லை. தமிழ் நாட்டில் பெருமளவில் பருத்தி நூல் கைத்தறிநெசவும், அடுத்தபடியாகப் பட்டு நெசவும் சிறக்க நடைபெற்று வருகின்றனவென்பதும், அவை பல இடையூறுகளுக்கும் நெருக்கடிக்களுக்கும் இடையிலும் அவ்வப்போது சிக்கி வாடவேண்டிய நிலைகளையெல்லாம் கடந்து வாழ்கின்ற்னவென்பதும், இனி என்றும்வாழும் வகையில் அவை சிறக்கும் என்பதும் நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டியவையாம்.

கைத்தறி நெசவினை எண்ணும்போது கதர் பற்றியும் நினைக்கவேண்டும். மத்திய மாநில அரசாங்கங்களுடைய பெரும் பொருள் செலவுடன் அது வளர்கின்றது. நாடு உரிமை பெறுவதன்முன் அண்ணல் காந்தி அடிகளார். போற்றி வளர்த்த புனிதத் தொழில் இது என்றாலும், உரிமை பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/225&oldid=1400675" இலிருந்து மீள்விக்கப்பட்டது