பக்கம்:தொழில் வளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நெய்தல் தொழில்-கைத்தறி

223



பிறகு அரசாங்கம் தனித்துறை அமைத்துக் கோடிக் கணக்கில் பணம் செலவுசெய்து அதை வளர்க்க நினைத்தாலும், 30% விலையில் தள்ளுபடி தரும் அள வுக்குச் சில சமயங்களில் வாணிப நிலையை மாற்றி அமைத்தாலும், அந்த நெசவுத் தொழில் காட்டில் அதிகமாக வளரவில்லை என்பது கண்கூடு. அரசாங்கக் கணக்கு, கதர் நூற்பவர்கள், இத்துணையர் எனக் காட்டுகிறது.

1வது ஐந்தாண்டு 2வது ஐந்தாண்டு 3 வது ஐந்தாண்டு எதிர்பார்த்தது

கதர் நூற்பவர் 26,000 181,000 181,000 +45,000 கதர் நெய்பவர் 716 9,000 15,000 உற்பத்தி 66 லட்சம் 80 லட்சம் கெஜம் கெஜம் (2 கோடி ரூபாய்) (1.64 கோடி ரூபாய்)

இதில் நூற்பவர் பலர் அரசாங்கத் தொடர்புடையவர்களாகவோ அல்லது சேவா சங்கத் தொடர்புடையவர்களோ அல்லது பற்றுடையவர்களாகவோ இருப்பவராவர். தொழிலுக்காக இதை மேற்கொள்ளுபவர் மிகச் சிலரே போலும். எனவே இது அரசாங்கப் பொருள் உதவியும் பற்றும் இல்லையானால் எப்படி வளர்ச்சி அடையும் என்று சொல்லமுடியாது.

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பெருந்தொழில்களுக்கிடையே இந்தப் பண்டைய தமிழ்நாட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/226&oldid=1399747" இலிருந்து மீள்விக்கப்பட்டது