பக்கம்:தொழில் வளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குடிசைத் தொழில்கள்

235




கிராமத் தொழிற் சங்கங்கள் 334

பனைவெல்ல உற்பத்தி 143

சிறு ரகத் தொழில் 148

கைத்திறன்-தொழில் 91

நார்த் தொழில செய்யும் , 25

பட்டு உற்பத்தி 1

இவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது சிறு துளி பெருவெள்ளம் ‘ என்ற மொழிக்கேற்ப, இத் தொழில்கள் கோடிக் கணக்கில் பொருள்செய்து, நாட்டு நல்ல தொழில்களைப் பாதுகாப்பதோடு, நாட்டு வருவாயினையும் மக்கள் வாழ்க்கை நிலையினையும் உயர்த்து வதை நன்கு அறிவோம். இச்சங்கங்களில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் உறுப்பினராக இருந்து தொழிலாற்றுகின்றனர். இரண்டாம் திட்டம் எல்லை. இறுதியில் இவை ஓர் ஆண்டில் சுமார் மூன்றேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களே. உற்பத்தி செய்தன. தற்போது இவற்றின் உற்பத்தித் திறன் இன்னும் மிக்கிருக்கும் என்று கொள்வதும் பொருந்தும்.

இவை அனைத்தும், அரசாங்க ஆணைவழி 1956-ம் ஆண்டிலே, தொழில் வளர்ச்சி நெறியாளர் (Director of Industries) வழி இயங்கத் தொடங்கின. அதற்கு முன்னும் அவ்வாண்டிலிருந்தும் அவை பல வகைகளில் விரிவுற்று வளர்ச்சியடைகின்றன. இவையனைத்தும், கூட்டுறவின் அடிப்படையில் அமைந்தவை. தனியான வகையிலும் தனியார் துறையிலும் இச்சிறு தொழில் வளர்ச்சியின் அளவிடற்கரிது. அவற்றின் விரிவும் பெருக்கமும் நாட்டை நல்வாழ்விற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/238&oldid=1400679" இலிருந்து மீள்விக்கப்பட்டது