பக்கம்:தொழில் வளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தொழில் வளம்



திட்டக் காலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் சுமார் ஐந்து அலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. இச்சங்கங்கள் சுமார் ஐந்துலட்ச மதிப்புள்ள பொருள்களை உற்பத்தி செய்து உலகுக்கு அளித்துள்ளது. இத்தகைய சங்கங்களை வாய்ப்புள்ள இடங்கள்தோறும் தென்னையும் பனையும் செறிந்து வளர்ந்தோங்கும் இடங்கள் தோறும் - உண்டாக்க அரசாங்கத்தார் முயன்று ஆவனசெய்து வருகிறார்கள். நாள்தோறும் இத்துறையில் புதுப்புதுச் சங்கங்கள் வளர்ந்து வருகின்றன. வளர்ந்து வரவேண்டுவதே நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்றதுமாகும். இவ்வாறு தமிழ்நாடு முக்கிய பகுதிகளில் கண்டபடி பெருந் தொழில்களை வளர்ப்பதோடு வீட்டுக்கு வீடு அமைந்து வளரும் இச்சிறு தொழில்களையும் வளர்த்து, பல வகையில் தன் தொழில் வளத்தை மங்காது காத்துவருகின்றது.

பரந்த பாரத நாட்டில், பிற மாநிலங்களோடு (States) ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வேறு பலதுறைகளில் முன்னேற்றங் கண்டுள்ளமை போன்றே தமிழ்நாடு, இச்சிறு தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றங் கண் டுள்ளது. தமிழ்நாடுதான் அதிகமான தொழிற் சங்கங்களை உடைய மாநிலம் என அண்மையில் எடுத்த கணக்கிணால் அறிய முடிகின்றது.இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட எல்லையில் நின்று ஆராயும்போது, தொழில் வாரியாகக் கணக்கிட்டால், சுமார் இரண்டாயிரம் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் இத்தமிழ் நாட்டில் இயங்கிப் பணி புரிகின்றன என்றும் இவற்றிற்கு அரசாங்கம் ஒரு கோடிக்குமேல் கடனாகவும். இனமாகவும் பொருள் வழங்கியுள்ளது எனவும் அறிகிறோம். இச் சங்கங்களைத் தொழில்வாரியாக ஒரு வகையில் பிரிக்கலாம் என எண்ணுகின்றேன். அந்நிலை வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/237&oldid=1382279" இலிருந்து மீள்விக்கப்பட்டது