பக்கம்:தொழில் வளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிசைத் தொழில்கள்

233




களாகக் காட்டி மகிழ்கின்றார்களே! இன்று உலகெங்கும் நடைபெறும் கைத்தொழிற் பொருட்காட்சிச் சாலைகளிலெல்லாம், தமிழரின் கைவண்ணத்திறன் காட்டும் கவினார் பொருள்கள் இடம் பெறுவதையும், அவற்றைக் கண்ட பிற நாட்டவர் தம்மை மறந்து போற்றுவதையும் எண்ணும்போது நாம் நம்மை மறக்கிறோ மல்லமோ !

இத்தகைய நாட்டிலுள்ள பொருள் உற்பத்தியும் செய்யும் அடிப்படைச் சங்கங்களுக்கு உண்ர்வூட்டவும் வேண்டிய உதவி செய்யவும் சென்னையில் ஒரு தாய்ச் சங்கமும் அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே கிராமச் சங்கங்களின் பொருள்களையெல்லாம் விற்பனைச் சந்தைக்கு அனுப்ப ஆண்டாண்டுள்ள மக்களுக்குநம் நாட்டின் தொழில் வளத்தை விளக்குகின்றது.

உயர்ந்த பொருள்களைச் செய்து நாட்டுத் தொழிலின் சிறப்பை உலகுக்கு உணர்த்துவது.ஒருபுற மிருக்க, வாழ்வின் தேவைக்குரிய பல பொருள்களைச் செய்யும் சிறு தொழிலோர் சங்கங்களும் பலப்பல நாட்டில் உள்ளன. உழவர் தம் ஒய்வு நேரத்தில் தென்னை, பனை நார்களைக் கொண்டு கயிறு திரித்து’ அவற்றைத் தம் தொழிலுக்குப் பயன்படுத்தும் செயலை மேலே கண்டோம். தற்காலத்தில், அந்த நார்களைக் கொண்டும் அவற்றில் பல வகை வண்ணம் தீட்டியும் எத்தனையோ வகையான கண்கவர் பொருள்களைச் செய்வதைக் காண்கின்றாேம். தமிழ் நாட்டில் இத்தகைய தொழில் புரியும் சங்கங்கள் இருபத்தைந்து உண்டென இரண்டாம் ஐந்தாண்டுத் திட்ட எல்லையில்,கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சுமார் 1500 பேர் உறுப்பினராக இருந்து பணிபுரிந்து பயன் பெறுகிறார்கள். இவற்றிற்கென இரண்டாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/236&oldid=1382056" இலிருந்து மீள்விக்கப்பட்டது