பக்கம்:தொழில் வளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தொழில் வளம்




சங்கங்கள் நாட்டில் நிறைந்துள்ளன. இவற்றால் நாட்டுப் பழங்காலத் தொழில் முறைகளும் தொழில் நுணுக்கங்களும் கெடாமல் வளர்ந்து வருவதை எண்ணிப் பாரப்பின் இவை செய்யும் தொண்டு அளப்பரிது என்பது நன்கு விளக்கும். தமிழ்நாட்டில் மிகப் பழைய காலத்தில் உலோகங்களாலும், கல்லாலும், பிற பொருள்களாலும் செய்யப்பெற்ற பல பொருள்களைப் பற்றியும் அவை வளர்ந்து வாழ்ந்த வகையையும் இந் நூலின் முற்பகுதியில் கண்டோமல்லமோ ஆம் அத்தகைய தொழில் முறைகளை - தொழில் நுணுக்க உண்மைகளை இச்சங்கங்கள் மங்காது காத்து வருகின்றன என்பதை எண்ணும்போது நமக்கு இவற்றின் வாழ்வும் வளர்ச்சியும் எத்துணை ஏற்றத்தை அளிக்கின்றன என்பது புலனாகுமே!

மேலேகண்ட நுணுக்கத்தொழிற்சங்கங்களில் சுமார் 5000 பேர் உறுப்பினராக இருந்து, நாட்டுப் பண்டைய தொழில்களை வாழவைக்கின்றனர். அரசாங்கமும் பல இலட்சக் கணக்கில் இனாமாகவும் கடனாகவும் பொருளை வழங்கி அவரவர் தொழில் வளர ஆவன செய்து வருகின்றது. இச்சங்கங்கள் ஆண்டுதோறும் சுமார் பத்து இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கின்றன. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி அண்டைநாட்டிலுள்ள நம் சுற்றத்தாரும், வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் வரும் ஆயிரக்கணக்காக யாத்ரீகர்களும் இப் பொருள்களின் அரிய வேலைப்பாடுகளைக் கண்டு கண்டு உணர்ந்து உணர்ந்து, உற்று உற்று வியந்து வியந்து போற்றுகிறார்களே ! வெளிநாட்டிலிருந்து வருபவர் இவற்றை வாங்கித் தத்தம்,நாடுகளுக்குக் கொண்டு சென்று ஆங்காங்கே உள்ளவர்களுக்கெல்லாம். இவற்றைக் காட்சிப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/235&oldid=1400678" இலிருந்து மீள்விக்கப்பட்டது