பக்கம்:தொழில் வளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குடிசைத் தொழில்கள்

231


 என்ற தாய் நிலையம். ஒன்று சென்னையில் அமைக்கப் பெற்றுள்ளது. இச்சங்கத்தின் முக்கிய நோக்க்ம் நாட்டின் பல பகுதிகளிலுள்ள சிறு ரக அடிப்படைத் தொழிற்சங்கங்களுக்கு மூலப்பொருள்களை வாங்கிக் கொடுப்பதோடு அவற்றிற்கு வேண்டிய பண உதவிகளைச் செய்வதோடு அச்சங்கங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஏற்ற சந்தைகள் அமைத்து விற்பனை செய்ய உதவுவதாகும். இவை அனைத்தும் நன்கு தொழிற் பட வேண்டும்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் கலைப்பொருள் செய்வோர் கூட்டுறவுச் சங்கங்களும் (Handicrafts Industrial Co-operatives) செயலாற்றி வருகின்றன. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட எல்லையில் இச்சங்கங்களின் எண்ணிக்கை தொண்ணுாற்றாென்றாக இருந்தது எனக் கணக்கிட்டுள்ளனர். அவை வருமாறு.

பாய் நெய்யும் சங்கங்கள் 35

மூங்கில், பிரம்பு கூடை நெய்யும் ,, , 24

பனை ஓலை பாய் கூடை . ,, . 7

கார் பிரஷ் செய்வோர் ,, .. 5

கற்சிலை செய்வோர் , , 5

கயிறு திரிப்போர்’ 4

வெண்கல விக்கிரகம் செய்வோர்.4 .

பொம்மை செய்வோர் ,, , ... 3

பொத்தான் , ,, . 1

கெட்டி வேலை செய்வோர் ,, . . . ; 1

கரி, பீங்கான் உற்பத்தி செய்வோர் , 1

வீணை வர்த்திய்க் கருவி செய்வோர் , 1

இவ்வாறு பல்வேறு வகைகளில் பல்வேறு பொருள்களை நாட்டுக்குச் செய்து தருவோர்தம் தெர்ழிலியற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/234&oldid=1400677" இலிருந்து மீள்விக்கப்பட்டது