பக்கம்:தொழில் வளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தொழில் வளம்



யிலும் கூட்டாகவும் உண்டாக்கி உதவுகின்றன இந்தச் சங்கங்களின் அமைப்பினாலேதான் மதுவிலக்கினால் உண்டான வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்ததோடு, மக்கள் பனைமரத்தின் முழுப் பயனைப் பெறவும் வழி உண்டாகின்றது. இதனால் பயன் பெறுவோர் தமிழ் நாட்டில் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

இவைகளையன்றி, பல்வேறு சிறுசிறு கைத் தொழில்களைச் செய்யும் சங்கங்களும், நாட்டில் பலப் பல உள்ளன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் இந்த வகையில் 148 சிறுரகத் தொழிலமைப்புக்கள் தமிழ் நாட்டில் உள்ளன.

முன்னுள் இராணுவத்தினருக்காக அமைத்த தொழிற் கூடங்கள். 4

தோல்பொருள் செய்யும் தொழிற் சாலைகள் 5

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 6

பித்தளை வெண்கல உலோகத் தொழிற்

சாலைகள் - 25

தச்சு, இரும்புப் பட்டறைகள் 52

மகளிர் தொழிற் சங்கங்கள் 45

தேயிலை உற்பத்திச் சங்கம் (குந்தா) 1

பூட்டு உற்பத்திச் சங்கம் (திண்டுக்கல்) 1

இரும்புப் பெட்டி செய்யும் சங்கம் (நாகை) 1 . சங்கம்

பிற 9

இவைகள் செம்மையாகத் தொழிற்படின் நாட்டில் குடிசைத்தொழில்கள் - சிறு ரகத் தொழில்கள்-நன்கு வளர்ச்சியடைய வாய்ப்பு உண்டு. இவைகளுக்குத் தாயகமாக சென்னை இராச்சியக் கூட்டுறவு சங்கம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/233&oldid=1382373" இலிருந்து மீள்விக்கப்பட்டது