பக்கம்:தொழில் வளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிசைத் தொழில்கள்

229




தொகை பெரும்பாலும் கதர், கிராமக் கைத்தொழில் நெறியாளரிடமிருந்தே பெறப்படுகின்றது. இச் சங்கங்கள் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருள்களை உற்பத்திசெய்து-விற்பனை செய்து-நாட்டுக்கு உதவித் தம் உறுப்பினர்களுக்கும் வாழ்வளிக்கின்றன.

அண்மையில் தமிழ நாட்டில் உண்டான மதுவிலக்கினால் வேலையற்றோர் பலராவர். அவர்கள் வாழ்வை நிலைபெறுத்தும் வகையில் பல தொழிற் சங்கங்கள் அமைக்கப் பெற்றன. அவற்றுள் முக்கியமானவை பனைவெல்ல உற்பத்திச் சங்கங்கள். இத்துறையில் மொத்தம் 1433 சங்கங்களில் 1,49.900 பேர் உறுப்பினராக இருந்து தொழிலாற்றிப் பயன் பெறுகின்றனர். இவர்கள் சுமார் ஏழுலட்சம் ரூபாய்பங்குத் தொகையாகச் செலுத்தி, கதர் கிராமக் கைத்தொழில் நெறியாளர் வழிச் சுமார் ஏழரை லட்சம் ரூபாய்மானிய மாகவும் ஐந்தரை லட்சம் கடனாகவும் பெற்றுத் தம் சங்கப் பணிகளை நன்குசெய்து, தம்தொழில் வளத்தைப் பெருக்கி வருகின்றனர். இவர்கள் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பனை வெல்லம் உற்பத்தி செய்கின்றனர். இந்த உற்பத்திச் சங்கங்கள் நன்கு வளம்பெற்று, சென்னையில் ஒருமத்திய சங்கமும் நாடெங்கிலும் கிளைச் சங்கங்களும், அடிப்படைச் சங்கங்களுமாகப் பலவகையில் அமைந்து தொழிற்படு கின்ற்ன. உற்பத்தி, பண்டமாற்று, விற்பனை முதலிய எல்லாத் துறைகளிலும் இவை கலந்து பணியாற்றுகின்றன. பனைவெல்லத்தோடு, கற்கண்டு முதலிய பொருள்களையும் இவை உற்பத்தி செய்கின்றன. பனை யால், உண்டாகப்பெறும். மக்களுக்குத் தேவையான, எத்தனையோ பொருள்களையும் இவை தனிப்பட்ட வகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/232&oldid=1382030" இலிருந்து மீள்விக்கப்பட்டது