பக்கம்:தொழில் வளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தொழில் வளம்




விளக்கிக் காட்டுகின்றன. நான் முன் கண்டபடி தனியார் வளர்க்கும் குடிசைத் தொழில்கள் பற்றி எழுதின் எல்லையற்று விரியும் என்ற காரணத்தினாலே கூட்டுறவு அடிப்படையில் அரசாங்க நல்லாதரவில் அமைந்த தமிழ்நாட்டுக் குடிசைத் தொழில்வளத்தை மட்டும் இங்கே குறித்து அமைகின்றேன்.

இன்று நாட்டில் பல்வேறு வகைத் தொழிற்சங்கங்கள் பணியாற்றுகின்றன. இங்கே கீழே தரப்படும் கணக்குகள் அனைத்தும் பெரும்பாலும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்ட எல்லையிலிருந்து எடுக்கப்பட்டவையேயாகும். தொழில் துறையினர் தம் வழி மக்களுக்கு உதவிய அமைப்புக்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பெறுகின்றன. அரசாங்க உதவிபெற்றும் பெறாமலும் வளரும் தொழில்கள் பல. கிராமத் தொழிற் சங்க்ங்கள் பல அமைக்கப்பெற்றன. 31.3.60 முடிய மொத்தம் 334 தொழிற்சங்கங்கள் அமைக்கப்பெற்றன அவற்றுள் தொழில் நிலைவகையில் கீழே கண்டவாறு ஒரு சிலவற்றைப் பிரிக்கலாம்.

எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் 124.

மண் பாண்டம் செய்யும்சங்கம் 50

செங்கல், ஓடு உற்பத்தியாளர் , 33

கைக்குத்தல் அரிசிச் சங்கம் 14

தேன் உற்பத்திச் சங்கம் 11

தோல் பதனிடும் சங்கம் 10

கரும்பு வெல்லம் உற்பத்திச் சங்கம் 4

(பிற மற்றத் தொழிற் சங்கங்கள்.)இவை மொத்தம் 18,687 உறுப்பினர் தம் ரூ. 5,42,125 மூலதனத்தைக் கொண்டு. திறம்படத் தொழில் வளர்க்கின்றன. இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/231&oldid=1400676" இலிருந்து மீள்விக்கப்பட்டது