பக்கம்:தொழில் வளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிசைத் தொழில்கள்

227




தொழில் அமைப்புக்களையும் அவற்தின்வழி நாடு பெறும் நன்மைகளையும் மட்டும் இங்கே காட்டலாம் என எண்ணுகின்றேன்.

தமிழ்நாட்டில் பழங்கால முதற்கொண்டே வீடு தோறும் அவரவ்ர் இயல்பிலே சிறு சிறு பொழுது போக்கு வேலைகளைத் தமக்கென மக்கள் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை அறிவோம். சிறப்பாக அவரவர் வாழ்வின் தேவைகளையும் சூழ்நிலைகளையும் பிற அண்டைப் பொருள்களையும் ஒட்டி அச்சிறு தொழில்கள் அமையும். உழவுத் தொழிலில் ஒய்வுபெறும் காலத்திலெல்லாம் பணியாட்கள்,பனைநார் தென்னைநார் இவைகளைச் செப்பனிட்டுக் கயிறுதிரித்து தம் உழவுக்கு அவற்றைப் பயனுள்ள பொருள்களாகச் செய்யும் தொழிலில் ஈடுபடுவதைக் கண்ணாரக் காண்கின்றாேம். அப்படியே ஒலைகளாலும், மூங்கில், பிரம்பு, கசங்கு முதலியவற்றாலும் கூடை முதலியன செய்வதைக் காண்கின்றாேம். ஒலை, கோரை முதலியவற்றால் பாய் நெய்வதையும் காண்கின்றாேம். களிமண் கொண்டும் வண்ணங்கொண்டும் பொம்மை செய்வதும் அவர் தொழிலன்றாே ! நூல் நூற்பதும் ஆடை நெய்வதும்கூடப் பழங்காலத்து உழவர் தம் ஒய்வுகால வேலைகளாக இருந்தன. இத்தகைய பணிகளையும் பிறவற்றையும் இன்று கூட்டுறவு முறையிலே அரசாங்கத்தார் அமைத்து, நாட்டில் தொழில் பெருக்கத்தையும் பெருக்கியவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி விற்க ஏற்பாடுசெய்து, வாணிபத்தையும் வளர்க்கின்றனர். கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் அரசாங்கத்தார் என்னென்ன செய்தார்கள் என்பதை அவர்தம் புள்ளிக் கணக்குகள் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/230&oldid=1382001" இலிருந்து மீள்விக்கப்பட்டது