பக்கம்:தொழில் வளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

தொழில் வளம்




உதவி, தமக்கும் வருவாயைத் தேடிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அவற்றுள் ஒன்று கூட்டுறவு முறை.

வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலமாகத் தமிழ் நாட்டின் பல இடங்களில் குடிசைத் தொழில்களை வளர்த்து வருவதைக் காண்கின்றாேம். அங்கங்கே தொழிற் சங்கங்களும், தொழிற் பேட்டைகளும், தொழில் நுணுக்க அலுவலகங்களும் பேரளவில் அமைத்து வருவதுபோன்றே, நாட்டில் முலை முடுக்கு களிலெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பெறுகின்றன. அவற்றின் வழி, வீணாகும் பொழுதையெல்லாம் மக்கள் பயனுள்ள முறைகளில் செலவுசெய்ய வசதி ஏற்படுகிறது. மிகக் குறைந்த செலவில், நிறைந்த பயனை இக்கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கும் மாநிலத்துக்கும் நாட்டுக்கும்வாரி வழங்குவதை யாரேஅறியாதார் !

கூட்டுறவுச் சங்கங்களைத் தவிர்த்து, தனியார் இத்தகைய தொழில்களை வளர்க்க நினைத்தாலும் அவர்களுக்கும் அரசாங்கம் போதிய முன்பணம் தந்து, அவர்தம் ஆக்க வேலைக்கு உறுதுணை புரிகின்றது. அத்தகைய தனியார் சிறுதொழில் அமைப்புக்கள் அளவற்றன். அவை அனைத்தையும் இங்கே அறுதியிடுவதென்பது நம்மால் இயலாது-அது நமக்குத் தேவை. யற்றதும் கூட. ஆனால் தமிழ்நாட்டுத் தொழில் வளத்தைக் காட்டும் முறையில் சிறு தொழில் வளர்ச்சியையும் காட்டவேண்டிய இன்றியமையாமை உள்ளமையின் கூட்டுறவு அமைப்பிலே உள்ள சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/229&oldid=1381990" இலிருந்து மீள்விக்கப்பட்டது