பக்கம்:தொழில் வளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. குடிசைத் தொழில்கள்


உரிமை பெற்றபின் நம்நாடு பல வகைகளில்முன்னேற்றம் பெற்று வருவதை அறிகின்றாேம். பெருந்தொழில், உழவு என்ற இரண்டின் நிலையிலும் கடந்த பதினைந்தாண்டுகளில் நாடு வளர்ந்த நிலையினை ஒருவாறு கண்டோம். இவைகள் மட்டுமன்றி சிறு சிறு தொழில்கள் பல குடிசைகளிலும் குக்கிராமங்களிலும் நாட்டு உட்புறங்களிலும் வளர்ந்து வருவதையும் காணல் நலம் பயப்பதாகும். இவற்றைக் குடிசைத் தொழில்கள் என்றும் சிறு தொழில்கள் என்றும் அரசாங்கத்தார் அறுதியிட்டுள்ளனர். உழவுத் தொழிலில் பணியாற்றும் பலருக்கு ஆண்டுமுழுதும் வேலை இருப்பதில்லை. சிலருக்கு ஆண்டில் பாதிநாள் ஒய் வாகவே இருக்கும். எதிர்பாராத பஞ்சம் முதலியவற்றின் காரணத்தாலும் நாட்டில் வேலை-சிறப்பாக உழவுத் தொழில்-இல்லாதநிலை ஏற்படும். அக்காலங்களில் வேலையற்ற அல்லது ஒய்வுபெற்றுள்ள மக்கள் தம் பொழுதை வீணாக்காது பயனுள்ள வழிகளில் செலவுசெய்து, சிறு தொழில்களைப் பெருக்கி, நாட்டுக்கு

15 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/228&oldid=1381983" இலிருந்து மீள்விக்கப்பட்டது