பக்கம்:தொழில் வளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தொழில் வளம்


இன்றைய நிலையில் தமிழ்நாட்டு மின்சார வளர்ச்சி இந்த அளவிலேயே அமையும். இந்திய நாட்டு வடபகுதிகளாகிய பஞ்சாப், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளைப்போன்று அதிகமாக நீர்மின்சார உற்பத்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை உள்ள பெரும் நிலைகளைப் பயன்படுத்தியாயிற்று எனலாம். எனினும் மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்து நீலகிரி, பாலனி (Palnis) போன்ற பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் ஆராய்ந்து பார்ப்பின் (ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இன்னும் நீர்மின்சார உற்பத்திக்கு இடமிருக்கலாம். எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் பத்து லட்சம் (கிலோ வாட்) மின்சாரத்துக்கு மேலாக நீர்வழிப் பெறுவது இயலாது என்பது தேற்றம். ஆக்க நிலையங்கள் இன்றைய நிலையில் ஆந்திரநாட்டுச் சிங்கனேரி நிலக்கரியாலும் பீகார் மேற்கு வங்காளத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதாலும் தொழிற்படுகின்றன.

தமிழ்நாட்டு மின்சாரத்தில் நான்கில் மூன்று பகுதி நீர் மின்சார நிலையங்களிலிருந்தே கிடைக்கின்றது. எனவே, அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாகச் சற்று விரிவாகவே காணல் நலம் பயப்பதாகும். இங்கே சென்னை மாநில மின்சார போர்டின் 1960-ம் ஆண்டில் கணக்கிட்ட அவர்தம் எழுத்தை அப்படியே தொகுத்துத் தருகின்றேன்.

1. சென்னை நீராவி-மின் உற்பத்தி நிலையம், சென்னை மின்சார வினியோகிப்புக் கழகத்தினரால் 1909-ல் நிறுவப்பட்டு 1947-ம் வருடம் ஆகஸ்டு மாதம் வரை அவர்களாலேயே இயக்கப் பெற்று, பின்பு சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பெற்றது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/245&oldid=1381974" இலிருந்து மீள்விக்கப்பட்டது