பக்கம்:தொழில் வளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்சாரமும் தொழில்வளமும்

241



வகையில் மின்சார இணைப்பில் பல நிலையங்களும் இணைக்கப் பெற்றுள்ளன.

நீர்மின்சார நிலையம் 1. பைகாரா - 70,000 கி.வா. 2. மேட்டுர் - 40,000 கி.வா. 3. பாபநாசம் - 28,000 கி.வா 4. மோயார் - 36,000 கி.வா 5. பெரியாறு - 105,000 கி.வா 6. குந்தா { P.H.I. 60,000 கி.வா - II. 175,000

ஆக்க அமைப்பு நிலையம் 1. சென்னை- 98,000 கி.வா 2. மதுரை - 14,000 கி.வா

இத்துணை ஆக்க வேலைக்கு இன்றளவும் சுமார் 120 கோடி ரூபாய் செலவாயிற்று. ஆண்டொன்றுக்குப் பதினைந்து கோடிக்குமேல் வருமானம் இவற்றால் வருகின்றது.

ஆண்டொன்றுக்கு 190 கோடி யூனிட் மின்சாரம் சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி (1960) செய்யப் பெற்றது. இதில் 76% நீர் மின்சார இயக்கமாகும்.

தற்போது வளர்ந்துள்ள நெய்வேலி நிலக்கரி அகழ்ந்தெழுப்பால் அங்கே ஒரு மின்சார நிலையம் அமைத்துள்ளனர். அதன் முதன்நிலையும் தொழிற்படத் தொடங்கியுள்ளது. நெய்வேலி மின்சார நிலையம் தொழிற்படத் தொடங்கினல் அதுமட்டும் 250,000 கி.வா. மின்சாரம் உண்டாக்கி நாட்டுக்கு அளிக்கும்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/244&oldid=1399743" இலிருந்து மீள்விக்கப்பட்டது