பக்கம்:தொழில் வளம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தொழில் வளம்


1-7-1957 முதல் நாட்டு மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பணியைத் ‘தமிழ்நாட்டு மின்சார போர்டு’ ஏற்று நடத்தி வருகின்றது. நூற்பு நெசவு ஆலைகள், சிமிட்டி உற்பத்திச் சாலைகள், இரும்பு உருக்குச் சாலைகள் இரசாயனத் தொழிற்சாலைகள், இரெயில்வேக்கள், பல்வேறு தொழிற் சாலைகள், தேயிலைத் தொழிற்சாலைகள் போன்ற நாட்டின் பல்வேறு பெருந் தொழிற்சாலைகள் அனைத்தும் நேரடியாகப் ‘போர்டி’னிட மிருந்தே தத்தம். தேவையைப் பெற்றுக்கொள்ளுகின்றன. ஐந்து பெரு நகராண் கழகங்கள் தம் தேவையைப் பெற்றுத் தத்தம் எல்லையில் உரியவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. அப்படியே எட்டுத் தனியார் அமைப்புக்களும் ‘போர்டி’னிடமிருந்து, மொத்தமாகப் பெற்றுப் பலருக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்து கொண்டுள்ளன.

இவ்வாறு 1927ல் தொடங்கிப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பெற்ற நீர்மின்சார நிலையங்களும் தனி ஆக்க மின்சார நிலையங்களும் அங்காங்கே தனித் தனியாகத் தொழிற்பட்டு வந்தன. எனினும் அவற்றையெல்லாம் இணைத்து தமிழ்நாடு முழுவதுக்கும்—எல்லாக் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் - நிலைத்த ஒரே அளவாக - அமைப்பாக - மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் இணைக்கும் திட்டம் மெல்லமெல்ல உருப்பெற்றது. இன்று மேலே கண்ட எல்லா நிலையங்களும் இணைக்கப் பெற்றன. நாடு முழுவதிலும் சுமார் 14000 மைல்களுக்கு உயர் சக்தி ஓட்ட அமைதியும் 20,000 தாழ் சக்தி ஓட்ட அமைதியும் உடையனவாகிய இணைப்பே இன்று பெருமளவில் இயங்கி வருகின்றது. கீழ்க்கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/243&oldid=1381969" இலிருந்து மீள்விக்கப்பட்டது