பக்கம்:தொழில் வளம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்சாரமும் தொழில்வளமும்

251


1951-க்கும் 1961-க்கும் இடையில் மின்சாரம் வளர்ந்துள்ள விதம்.
31-3-51 331-3-61
உற்பத்தியின் அளவு M W 156 571
யுனிட் (பத்து லட்சம் கணக்கில்) 630 2,500
H.T.Lines (மைல்கள்) 4355 15,500
L.T " " 3580 20,000
பயன்படுத்துபவர் (லட்சத்தில்) 2.5 8
மின்சாரம் பெற்ற கிராமங்கள் 1613 10,000
விவசாய இறைக்கும் இயந்திரங்கள் 14373 100,000
செலவு (அடிப்படை) கோடியில் 30.96 125.34
மொத்த வருமானம் கோடியில் 3.37 18.42


 இவ்வாறு ஆண்டு தோறும் வளர்ச்சி அடையும் மின்சாரம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புக்கள் உள்ளன. முதன் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் மின்சாரத் துறை பல வகையில் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்தது. இன்னும் குந்தாவும் நெய்வேலியும் முழு அளவில் தொழிற்படவில்லை. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 133 கோடி செலவில் இன்னும் 7000 கிராமங்களுக்கு 75,000 இறைக்கும் இயந்திரங்களுக்கும், நாட்டில் வளரும் பல்வேறு தொழில்களுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. அத்தனையும் தொழிற்படினும் நாட்டின் தேவைக்கு அது போதுமா? என்ற வினாவுக்கு விடை காணமுடியாது. அண்டை நாடுகளும் மின்சாரத் தேவையினால் நம்மைக் கேட்கும் நிலையில் உள்ளன. எனவே இன்னும் என்ன வகையில் புது வாய்ப்புக்கள் உண்டோ அத்தனையும் அடுத்த ஐந்தாண்டுத் திட்டங்களில் ஆராய்ந்து ஆக்கப் பணிக்கு வழிகோல வேண்டுவது அரசாங்கத்தின் முதற் கடமை என்ற அளவில் இதை நிறுத்தி மேலே செல்லலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/254&oldid=1401967" இலிருந்து மீள்விக்கப்பட்டது