பக்கம்:தொழில் வளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தொழில் வளம்


சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களும் சில சிறு நகரங்களும் தத்தம் தொழில் வளர்ச்சியின் காரணத்தால் பல்வேறு வகையில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கிராமங்கள் பல பெரும்பாலும் ஒளிக்காகவும் பாசனத்துக்காகவுமே மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அவற்றை யெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் காட்டல் என்பது இயலாத ஒன்றாகும்.

மின்சாரத்தினாலேயே வளரும் நாட்டின் ஒரு முக்கியமான துறை படக்காட்சித் துறையாகும் (Cinema). படப் பிடிப்புக்கும் அதைச் செம்மைப்படுத்துவதற்கும் அதை நாடு முழுவதும் காட்டிக் கலை வளர்ப்பதற்கும் இம் மின்சாரமே அடிப்படையாக அமைந்துள்ளது. மின்சாரம் இல்லாதிருந்தால் நாட்டில் இத்துணை அளவில் படக்காட்சி அரங்குகள் உண்டாகியிருக்குமா என்பது ஐயத்திற்கிடமாகிய ஒன்று. இந்தத் தொழில் மட்டுமின்றி நாட்டு எல்லாத் தொழில் துறைகளுமே நிச்சயமாக இந்த அளவில் வளர்ந்திருக்க முடியாது என்பது திண்ணம். ஐந்தாண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கின்படி தமிழ்நாட்டில் சுமார் 800 புகைப்படக் கொட்டகைகள் மின்சாரம் பெற்றன. (நிலைத்தவை 322; சுற்றுபவை 477).

உயர்சக்தி மின்சாரத்தை நேரடியாக எடுத்துக் கொள்ளும் பெருந்தொழில் நிலையங்கள் நாட்டில் எத்தனையோ உள்ளன. அவற்றை ஓரளவு வரிசைப்படுத்திக் காட்டிவிட்டாலே தமிழ்நாட்டுத் தொழில் வளத்தை ஒரளவு அறுதியிட்டுக் காட்டியதாக முடியும். ஆம் ! அத்தனைப் பெருந்தொழிற்சாலைகளும் மின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/255&oldid=1401968" இலிருந்து மீள்விக்கப்பட்டது