பக்கம்:தொழில் வளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

253


சக்தியின் துணையாலேயே இயங்குகின்றன என்பதை யாரே அறியாதார் ? ஒவ்வொரு நீர் மின்சார நிலையத்திருந்தும் தனி ஆக்க மின்சார நிலையத்திருந்தும் மின்சாரம் பெறும் தொழிற்சாலைகளை மின்சார போர்டின் ஆண்டறிக்கைகளில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை வளர்ந்து வருவதைக் கணக்கின்றிக் காணலாம். இந்த அடிப்படையில் ஓரளவு நாட்டில் வளரும் தொழில்களையும் அவற்றால்வளம்பெறு நிலையையும் நன்கு புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். (1956-57) ஐந்தாண்டுகளுக்குமுன் எடுத்த கணக்குப்படி பைகாரா 165 தொழிற்சாலைகளுக்கும் மேட்டுர் 65 தொழிற்சாலைகளுக்கும் பாபநாசம் 65 தொழிற்சாலைகளுக்கும் சென்னை நகர மின்சாரம் 117 தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தைத் தருகின்றன. தற்போது இந்த அளவு மிகவும் விரிந்து வளர்ந்துள்ளது என்பது தோற்றம்.

தற்போது செயல் துறைக்கு வழிகோலிவரும் குந்தா இன்னும் நன்கு வளரத்தக்க பணிகள் நடை பெற்றுக்கொண்டு வருகின்றன. நான்கு பெரும் மின்சார நிலையங்களும் இணை மின்சார நிலையம் ஒன்றும் அங்கே அமைக்கப்பெறும். இப்பெரும் ஆற்றல் வாய்ந்த மின் நிலையத்திற்குக் கொழும்புத் திட்டத்தின் கீழ் கனடா (Canada) நாட்டு நிபுணர்தம் துணையும் உதவியும் உள்ளன. அதனுடைய தொழிற்படுநிலையை நேரில் காண்பது மிகவும் வியப்பூட்டுவதாகும். கண்டார் அதன் விரிவையும் விளைவையும் கண்டு வியப்பார்கள்.

முன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாம் மேலே காட்டியபடி மின்சார உற்பத்தியை இருமடங்காக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/256&oldid=1382057" இலிருந்து மீள்விக்கப்பட்டது