பக்கம்:தொழில் வளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தொழில் வளம்


வேலைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. மேட்டுர் முழை (Tunnel)த்திட்டம் தொழிற்படத் தொடங்கினால் சுமார் 38 கோடி யூனிட் நமக்குக் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும். சூலையிலிருந்து ஜனவரி வரையில் (ஏழு திங்களில்)நீர்ப்பாசனத்துக்காக விடும் நீரை இந்த முழைத் திட்டம் வழியாகப் புது முழை வழி செலுத்தி அதன்மூலம் இந்த மின்சாரத்தைப் பெருக்கும் திட்டம் தீட்டியுள்ளார்கள். திட்டக் கமிஷனலும் ஏற்றுக் கொள்ளப்பெற்ற இந்தத் திட்ட்ம் விரைவில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப் பெறுகின்றது. குந்தாவில் மூன்றாவது நிலையாக வீழ்ச்சியை அமைத்து மின்சாரத்தைப் பெருக்கினால் அதன்வழி குந்தா திட்டத்தால் மொத்தம் 420,000 கி.வா. பெற இயலும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். பரம்பிக்குளம் திட்டம் கேரளநாட்டுடன் நன்கு ஒப்பந்தம் செய்து முடிந்த காரணத்தால் விரைவில் செயலாற்றத் தொடங்கலாம். இத்திட்டம் முற்றுப்பெறின் சுமார் லட்சம் கிலோ வாட்ஸ் (முன்று அமைப்புக்களிலும்) மின்சாரம் கிடைக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர். பெரியாற்றுப் பாசனத்துக்குப் பயனற்று நிற்கும் நீரை இறைத்து மின்சாரம் உண்டாக்கினால் மேலும் அந்த நிலையத்தில் நான்கு கோடியே முப்பத்தைந்து லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதே பெரியாறின் இரண்டாவது அமைப்பில் (Stage) இன்று 35,000 கி. வா. பெற வசதியும் இருக்கின்றது. அப்படியே நெய்வேலி மின்சார நிலையம் நன்கு தொழிற் படத்தொடங்கின் அதன் நிறைவில் இரண்டு லட்சம் கி.வா. மேலாகப் பெற வாய்ப்பும் உண்டு. - இப்படி மூன்றாம் ஐந்தாண்டுத் திட்ட முடிவிற்குள் எல்லாம் ஒழுங்காகச் செய்து முடிக்க்ப்பெறின் 1965-66ல், நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/257&oldid=1382061" இலிருந்து மீள்விக்கப்பட்டது