பக்கம்:தொழில் வளம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தொழில் வளம்


கின்றது. அந்த உணர்ச்சியின் வழியே பலப்பல புது வழிகள்தோன்றுவது இயற்கை. அது தான் உண்மையில் வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். ஆகவே அந்த தேவையின் அடிப்படையில் ஆராயும்போது நமது துணைக்கு அணுச்சக்தி வந்து நிற்கின்றது. அணுச் சக்தியைக் கொடுத்து அழிவுத்துறைக்கு உலகை ஈர்த்துச் செல்லும் மேடுைகளுக்கு மாறாக, நம் இந்திய நாடு அதே அனுச்சக்தியை ஆக்கத் துறைக்குப் பயன்படுத்த முன்னிற்கின்றது. இந்த நிலை வரவேற்கத் தக்கதாகும். இந்த அணுச்சக்தியைக்கொண்டு அடுத்த நிலையில் (நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில்) இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கி. வா. அளவில் மின்சாரத்தைப் பெருக்க வேண்டிய திட்டம் தீட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் மின்சாரத்துறையாளருக்கும் அதன் நெறியாளருக்கும் உள்ளது.[1] எனவே அவர்களை அந்த வகையில் இன்று தொடங்கியே வழி வகுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். மற்றும் அண்டை உறுப்பு நாடுகளிலிருந்து பெறக்கூடிய இயற்கைச் சாதனங்களை- அவர்கள் பாழாக்கும் ) சக்தியாகிய சாதனங்களை-நமக்குத் தருமாறு வேண்டிப் பெறவும் ஆவன செய்ய வேண்டும். இந்த முயற்சிகளை உண்மையில் தமிழ் நாட்டுத் தொழில் வளத்தை உயர்த்தப் பயன்படுவதாகும்.

அண்மையில் அரசாங்கத்தின் மற்றாெரு முயற்சியும் தெரிவிக்கப் பெற்றுள்ளது. பெருந்தொழிலைச் செய்து நாட்டுத் தொழில் வளத்தை வளர்க்கும் தனி

  1. * (இத்துறை தொழிற்படத் தொடங்கியுள்ளது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/259&oldid=1382069" இலிருந்து மீள்விக்கப்பட்டது