பக்கம்:தொழில் வளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

259


மாகத்தான் நாட்டிலுள்ள வறுமையைப் போக்க முடியும் ; எல்லா மக்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு ஏற்படச் செய்ய முடியும். ஆகவேதான் நம்முடைய திட்டங்களில் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி, நெய்வேலி நிலக்கரித் திட்டம் வெற்றி பெறுவதையே பெரிதும் பொறுத்து இருக்கிறது. இத்திட்டம் 86 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியப் பகுதிகள் -

(1) 35 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான சுரங்க வேலைத் திட்டம்.

(2) பழுப்பு நிலக்கரியை உபயோகப்படுத்தி 2.5 லட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது.

(3) பழுப்பு நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் டன் ஊரியா உரம் தயாரிப்பது.

(4) 3.8 லட்சம் டன் சுட்ட நிலக்கரி அச்சுக்கள் தயார் செய்வது.

கெய்வேலி மின்சார உற்பத்தி நிலையத்திற்கு ரஷ்ய உதவி கிடைத்திருக்கின்றது. அதற்கான ஒரு ஒப்பந்தமும் 1957-ம் ஆண்டு நவம்பரில் ரஷ்யாவுடன், செய்யப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையத்தைக் கட்டுவதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் இயந்திரமூலம் மின்சார, உற்பத்தி இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கலாம். 1962-ம் ஆண்டு டிசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/262&oldid=1382139" இலிருந்து மீள்விக்கப்பட்டது