பக்கம்:தொழில் வளம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தொழில் வளம்


பருக்குள் 2.5 லட்சம் கிலோவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கிறோம். உர உற்பத்திக்கான தொழிற்சாலையை இத்தாலி, மேற்கு ஜெர்மனி நாடுகளின் உதவி கொண்டு அமைக்க ஏற்பாடாகி வருகிறது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு, பல இயந்திரங்களும் வர ஆரம்பித்து விட்டன.சுட்ட நிலக்கரி அச்சுக்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலை, அமைப்பிற்கு வந்துள்ள டெண்டர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. நிலக்கரிச் சுரங்கத்தில் நல்ல உயர்தரக் களிமண் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. இதைச் சுத்தம் செய்து பல பொருள்களை உற்பத்தி செய்வதற்கு உபயோகப் படுத்த முடியும். இதற்கான ஒரு தொழிற்சாலையும் கட்டப்பட்டு வருகின்றது.

நெய்வேலித் திட்டம் முழுமைக்கும் 26,750 ஏக்கரா நிலம் உரிமை செய்ய வேண்டியிருக்கிறது. இதுவரையிலும் 11,454 ஏக்கரா நிலம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட் மக்களுக்கு வேறு இடங்களில் வசதி, செய்து கொடுக்கப்பெற்று, அவ்ர்கள் புனர் வாழ்விற்கான உதவிகளும், அளிக்கப் பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பணியர்ற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு வீடு கட்டும் திட்டமும் விரைவாக முன்னேறி வருகின்றது. குடிநீர் வசதி, விளக்கு வசதிகள், பள்ளிகள், சுகாதார வைத்திய வசதிகள், கடைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களை நியாயமான விலைக்கு விற்கும் முறையில் கூட்டுறவுத் தாபனங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/263&oldid=1382148" இலிருந்து மீள்விக்கப்பட்டது