பக்கம்:தொழில் வளம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

261


இரும்புத் தொழிற்சாலை

தமிழ் நாட்டில் இரும்பு, உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இல்லாத குறை பெரும் குறையாக, இருந்து வந்திருக்கின்றது. சேலம் மாவட்டத்தில்,இரும்புக் கனி ஏராளமாக உள்ளது. ஆயினும் அதிலே இருக்கக்கூடிய இரும்புச் சத்துக் குறைவுதான். இரும்புக் கனியை உருக்குவதற்கான நிலக்கரியும் நம் மாநிலத்தில் இது வரையில் கிடைக்காது இருந்தது. தற்போது நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் இரும்புக் கனியையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரியையும் உடன் கொண்டு இரும்பு, உற்பத்தி செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. கிழக்கு ஜெர்மன் நிபுணர்கள். இதைப்பற்றி ஒரு முன்னிலை அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்கள். மேற்குஜெர்மனியிலிருந்து இத்திட்டத்திற்கு உதவ முன் வந்துள்ளார்கள். முதனிலை சோதனைகள், இத்திட்டம் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையை நமக்கு ஊட்டுவதாய் இருந்தாலும், இதைப்பற்றி இன்னும் பெரிய அளவில் சோதனைகள் நடத்த வேண்டிய அவசியத்தைப்பற்றி ஜெர்மன் நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின்புதான் அச் சோதனைகளுக்கு ஏற்பாடு செய்யமுடியும். அச் சோதனைகளின் அடிப்படையில் இரும்பு உற்பத்தி செய்ய முடியும் என்ற முடிவு ஏற்படுமேயானால் தமிழ்நாட்டில் கட்டாயம் இரும்புத் தொழிற்சாலை அமையும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டியதில்லை. மத்திய சர்க்கார் இதற்கான திட்டங்களைப் பரிசீலிப்பதற்கு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/264&oldid=1382163" இலிருந்து மீள்விக்கப்பட்டது