பக்கம்:தொழில் வளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தொழில் வளம்


கின்றார்கள். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் இதற்கென முதற்படியாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே இரும்புத் தொழிற்சாலை அமைப்பதற்கான முதனிலை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும், முடிவான சோதனைகள் நடைபெற்று, திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற உறுதியை நிபுணர்கள் தெரிவிக்கின்ற வரையில், நாம் பொறுமையுடன் காத்திருக்கத்தான் வேண்டும். பல கோடிக்கணக்கில் முதலீடுசெய்ய்வேண்டிய தொழிலைச் சோதனைகள் முடிவு பெறாமல் எடுத்துக் கொள்வது என்பது முடியாத காரியம். இதற்கான எல்லா வேலைகளையும் விரைவாகக் கவனிப்பதற்காக ஒரு தனி அதிகாரியையும் நாம் நியமித்திருக்கிறோம். முதனிலை வேலைகளுக்காக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாநில சர்க்கார் நிதியில் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது சேலத்தில் உள்ள இரும்புக் கனியைவெட்டி எடுத்து அவைகளை ஜாம்ஷெட்பூருக்கும், ஜெர்மனிக்கும் சோதனைகள் நடத்துவதற்காக அனுப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இச்செலவுக்காக 1961-62-ம் ஆண்டு பட்ஜெட்டில் 7.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலித் திட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் நம் இராஜ்யத்திற்கு மின்சாரம், உரம், எரிப்பொருள்கள் போன்ற பல வசதிகள் கிடைப்பதோடு, பல புதிய உபதொழில்கள் தோன்றக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். அண்டை இராஜ்யங்களுக்கும் இத்திட்டத்தின் மூலமாகப் பல பலன்கள் ஏற்படலாம். மின்சார உற்பத்தியை 4 லட்சம் கிலோ வாட்டாக உயர்த்துவதற்கு முன்றாவது ஐந்தாண்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/265&oldid=1382170" இலிருந்து மீள்விக்கப்பட்டது