பக்கம்:தொழில் வளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

2


திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கரியை அதிக அளவில் வெட்டி எடுப்பதற்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காவிரி எண்ணெய்

தமிழ் நாட்டில் காவிரிப் பகுதியில் எண்ணெய் இருக்கின்றதா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி பல அந்நிய நாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டு வந்துள்ளது. 1956-ம் ஆண்டு ரஷ்ய நிபுணர்கள் அவ்விடத்தைப் பார்வையிட்டு இங்கு எண்ணெய் கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்ற கருத்தை வெளியிட்டனர். இதற்காக முதனிலைச் சோதனைகளை மேற் கொள்ள வேண்டுமென இந்திய அரசாங்கத்திற்கு, ஆலோசனை கூறினர். நம் சர்க்காரும் இதைப்பற்றி மத்திய சர்க்காருக்கு எடுத்துச் சொல்ல, இதற்கான சோதனைகள் 1957-58-ல் ஆரம்பமாயின. இந்தியப் புவியியல் ஆராய்ச்சிக் கழகம் இதற்கான சோதனைகளை, மேற்கொண்டது. இதுவரையில் சுமார் 4,000 சதுர மைல் அளவில் ‘சர்வே’ நடத்தியுள்ளார்கள். மேலும் பல பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. எண்ணெய் எரிவாயுக் கமிஷனும் (Oil and Natural Gas Commission) இங்கு ஒலி அலைச் சோதனைகளை நடத்த நிபுணர்களையும் கருவிகளையும் அனுப்பியுள்ளனர். இந்த முதனிலைச் சோதனைகள் இப்பகுதியில், எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றன.

ஏனைய மத்தியத் திட்டங்கள்

நீலகிரியில் கச்சாபிலிம்ஸ் தொழிற்சாலை அமைப்பதற்காக உதகைக்கு அருகில் ஒர் இடம் தெரிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/266&oldid=1382185" இலிருந்து மீள்விக்கப்பட்டது