பக்கம்:தொழில் வளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தொழில் வளம்


தெடுக்கப்பட்டுக் கட்டடம் கட்ட ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. மத்திய அரசாங்கம் நிறுவப் போகும் மற்றாெரு முக்கியத் தொழிற்சாலை, கிண்டியில் இரண சிகிச்சைக் கருவிகள் உற்பத்திக்கானது ஆகும். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. டெலி பிரிண்டர் இயந்திரங்கள் செய்வதற்கான ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புரோட்டோ டைப் தொழிற்சாலை ஒன்று நியமிக்கும் திட்டமும் நிறைவேறி வருகிறது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், கனரக மின்சாரக் கருவிகளை உற்பத்தி செய்ய அமைக்கப் போகும் இரண்டு பெரும் தொழிற்சாலைகளில் ஒரு தொழிற்சாலை தென்னிந்தியாவில் அமையும். நம்முடைய மாநிலத்திலுள்ள சில இடங்களை இதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழு வந்து பரிசீலனை செய்து சென்றிருக்கிறது. இத்தொழிற்சாலை நம்முடைய மாநிலத்திலே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெரம்பூர் இரெயில் பெட்டித் தொழிற்சாலை 1955-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிற்று. ஆண்டு ஒன்றுக்கு 350 பெட்டிகள் கட்டக்கூடிய அளவை ஐந்தாண்டுகளில் அடைய வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இந்த இலக்கை மூன்று ஆண்டுகளிலேயே அடைய முடிந்தது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு இங்கு 600 பெட்டிகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு முடிவிற்குள்ளாக 700 பெட்டிகள் கட்டக்கூடிய அளவிற்கு விரிவடைந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/267&oldid=1382193" இலிருந்து மீள்விக்கப்பட்டது