பக்கம்:தொழில் வளம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

265


இதில் 7.5 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளுக்கு உள்ளிட்டு வசதிகள் செய்வதற்கான ஒரு திட்டம் 8.7 கோடி ரூபாய் செலவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டு விடும். இதன் மூலம் பெரம்பூர் தொழிற்சாலையில் தயாராகின்ற எல்லா ரயில் பெட்டிகளும் இந்தத் தொழிற்சாலையிலேயே உள்ளிட்டு செய்யக் கூடிய வசதிகள் ஏற்பட்டுவிடும்.

தனியார் துறை

கம் ராஜ்யத் தொழில் வளர்ச்சியில் தனியார் துறை ஒரு முக்கியப் பங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வகைத் தொழிற் சாலைகள் பெரிய அளவிலே அமைப் பதற்கான திட்டங்களைப் பல தொழிற் கம்பெனிகள் வெற்றியுடன் நிறைவேற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் முதன் முதலில் ஏற்பட்ட தொழில் நூல் நூற்கும் ஆலைகள்தாம். 1950-ம் ஆண்டில் 71 ஆலைகள் 17 லட்சம் கதிர்களுடனும் 7,400 தறிகளுடனும் ஏற்பட்டிருந்தன: 1956-ம் ஆண்டில் மேலும் 31 ஆலைகள் அமைந்து மொத்தம் 217 லட்சம் கதிர்களும் 8.016 தறிகளும் இயங்கிவந்தன. அடுத்த ஐந்தாண்டுகளில் 30.6 லட்சம் அளவிற்குக் கதிர்கள் அதிகப்பட்டுள்ளன. அகில இந்தியாவிலும் 135.4. லட்சம் கதிர்களே உள்ளன. இவைகளில் 22 சதவீதத்துக்குமேல் நம்முடைய மாநிலத்தில் அமைந்துள்ளன. ஆனால் தறிகள் போதுமான அளவுக்கு அதிகரிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இங்கு உற்பத்தியாகும் நூலில் பெரும் பகுதி கைத்தறிக்கு உபயோகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/268&oldid=1382206" இலிருந்து மீள்விக்கப்பட்டது