பக்கம்:தொழில் வளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தொழில் வளம்


படுவதுதான். இருப்பினும் தறிகளை மேலும் அதிகப்படுத்துவதற்கும் முயற்சி எடுப்பது அவசியம். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் மில்களில் பொருத்துவற்காக 10,000 விசைத் தறிகளை நம்மாநிலதிற்காக ஒதுக்கவேண்டுமென மத்திய சர்க்காரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அண்மையில் துணி உற்பத்தி செய்வதில் ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டிருக்கின்றது. இயற்கையாகக் கிடைக்கும் பஞ்சு அல்லது பட்டு இவைகளைக்கொண்டு துணி செய்வதற்குப் பதிலாக இரசாயன முறையில் செயற்கைப் பஞ்சு, செயற்கை நூல் இவைகளை உற்பத்திசெய்யும், முறைகளைக் கண்டு பிடித்துள்ளார்கள். இதன் பயனாக விவசாய நிலங்களில் பஞ்சு உற்பத்தி செய்வதற்குப் பதில் காடுகளில் வளருகின்ற மரங்களை உபயோகித்துச் செயற்கைப் பஞ்சையும், நூலையும் தயார் செய்ய முடியும். இதற்கான நிலம் பஞ்சுப் பருத்தி விளைவிக்கும் நிலத்தைப் போன்று வளம்பெற்றதாக இருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. அத்துடன் ஒரு ஏக்கரில் தயாராகின்ற பருத்தியைக் காட்டிலும் அந்த ஏக்கரில் தயாராகின்ற மரத்தைக் கொண்டு செய்யப்படும் செயற்கை நூல் பல மடங்கு அதிகமாக உள்ளது. பஞ்சுப் பற்றாக்குறை இருக்கக்கூடிய நாட்டில் இந்த நவீன முறைகளைக் கையாளுவது அவசியமாகிறது. இந்த அடிப்படையில் “தென்னிந்திய விஸ்கோஸ் கார்ப்பொரேஷன்” என்ற தாபனம் கோயம்புத்துருக்கு அருகில் இதற்கென ஒரு தொழிற்சாலையை அமைத்து வருகின்றது. நம் ராஜ்யத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய முக்கியமான தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/269&oldid=1382214" இலிருந்து மீள்விக்கப்பட்டது