பக்கம்:தொழில் வளம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

267


சேலத்தில் அலுமினியக் கனியை உபயோகித்து அலுமினியம் தயார் செய்வதற்கான திட்டம் பூர்த்தியாகிவிட்டது. சமீபத்தில் இதற்காக ஒரு கம்பெனியும் பதிவு செய்யப்பட்டு மூலதனத்திற்கான பங்குகளும் பொது மக்களிடமிருந்து சேர்க்கப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள சிறந்த மான்டிகேட்டினி என்ற கம்பெனி இதற்கு உதவ முன் வந்துள்ளது. வேலை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் அலுமினிய உலோக உற்.பத்தி செய்ய முடியுமென எதிர் பார்க்கப்படுகிறது.

வருடம் ஒன்றுக்கு 20,000 டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை ஒன்றை சேஷாயி தாபனத்தார் கட்டி வருகின்றனர். மேலும் சிறிய அளவில் காகிதம் உற்பத்தி செய்வதற்காக ஆறு லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சர்க்கரைத் தொழிற்சாலையில் உப பொருளாகக் கிடைக்கும். கரும்புச் சக்கைகளைக் கொண்டு காகிதக் கூழ் (pulp) செய்யக்கூடிய திட்டமும் பரிசீலனையில் இருக்கின்றது. சர்க்கரைத் தொழிற்சாலையிலே ஏற்படக்கூடிய இன்னொரு மூலப் பொருள் வெல்லக் கசடு (molasses). இதிலே இருந்து எரி சாராயம் உற்பத்தி செய்ய முடியும். வருடம் ஒன்றுக்கு 20 லட்சம் காலன் எரி சாராயம் உற்பத்தி செய்யக் கூடிய ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு லைசென்சு வழங்கப்பட்டுள்ளது.

உரத் தொழிற்சாலைகள் பல ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் நம் இராஜ்யத்தில் உள்ளன. முன்பே குறிப்பிட்டபடி நெய்வேலியில் யூரியா உரம் செய்வதற்குத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பாரி அண்டு கம்பெனியார் அம்மோனியம் பாஸ்பேட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/270&oldid=1382230" இலிருந்து மீள்விக்கப்பட்டது