பக்கம்:தொழில் வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தொழில் வளம்


வழியிடைக் கண்ட கற்களை எடுத்துத் தன் உணவைக் கொள்ளப் பயன்படுத்திய மனிதன் அந்தக் கற்காலத்திலேயே தன் உணவை அறுக்கவோ சிதைக்கவோ அன்றித் தக்க வகையில் பக்குவப்படுத்தவோ முடியாத நிலையில், அக்கற்களைக் கூராக்கக் கற்றுக் கொண்டான். கல்லாலாகிய கத்தியும் பிறவும் அக்காலத்தில் அவன் செய்தவையே. அதுவே அவனுடைய முதல் தொழிலாக அமைந்தது. அதற்கெனத் தனியாக அவனுக்குத் தொழிற்சாலைகள் கிடையா. கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட கற்களை எடுத்துக் கூராக்கிக் கொண்டான் அவன். ஆனால் அதற்கென அவன் பல கற்களுள் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். எனவே தொழிலின் முதற்படியில் அவன் தொழிலுக்குப் பயன்படும் (Raw material) பொருள்களின் தரத்தை ஆராயும் திறத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

கற்காலத்துக்குப் பிறகு இரும்புக்காலம் செம்புக் காலம் முதலிய, காலங்கள் வரலாற்றில் வருகின்றன எனக் காண்கின்றோம். அவற்றின் பொருள்கள் என்ன? அவ்வக்கால மனிதன் அவ்வவ்வுலோகங்களாலாகிய பொருள்களைப் பயன்படுத்தினான் என்பதே பொருளாகும். ஆனால் அந்த முதற் கற்காலத்துக்கும் இந்த இரும்பு செம்புக் காலங்களுக்கும் இடையில் எத்தனையோ நூற்றாண்டுகள் - ஆயிரமாயிரமாண்டுகள் - கழிந்திருக்க வேண்டும். அதற்குள் தனித்தனியாக வாழ்ந்த மனிதன் கூடி வாழக் கற்றுக்கொண்டவனாக வேண்டும். இரும்பைக் காய்ச்சி உருக்கி எஃகாக்கி அதையும் கூரிய ஆயுதங்களாக வடிக்க அவன் கற்றுக்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/27&oldid=1398204" இலிருந்து மீள்விக்கப்பட்டது