பக்கம்:தொழில் வளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

23


துடன் நாட்டுக்கு நாடு. உலகை நடுங்கவைக்கும் போர்க் குமுறல்களும் உண்டாகின்றன. இவையெல்லாம் ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்’ இருபதாம் நூற்றாண்டின் நாகரிகக் கோலம்போலும்! ஆனால் அந்த ஆதி மனிதன் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவனாய் வயிற்றுத் தீத்தணியும்- பசிபோக்கும் தேவை ஒன்றினையே அறிந்திருந்தான்.

இயல்பாக வயிற்றுக்குத் தேவையான, உணவு கிடைக்கவில்லை என்ற நிலை உண்டான பிறகே அவன் உணவுக்கு என்ன செய்வது என்று எண்ணியிருப்பான். ‘Necessity is the mother of invention’. (தேவை ஆய்வை வளர்க்கின்றது) என்ற ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டன்றோ! அதன் வழியே இன்னும் தேவையே பலப்பலப் புது ஆய்வுகளைச் செய்யத் தூண்டுகின்றது. ஆதி மனிதனும் இதற்கு விலக்கானவனல்லன். எனவே தன் வயிற்றுப்பசி தணிய உயரத்திருந்த காய்கனிகளையும் ஓடிய பிற விலங்குகளையும் பறந்த பறவைகளையும் வீழ்த்திக் கொல்ல எண்ணியிருப்பான். அந்த எண்ணத்துக்கு அவனுக்கு உறுதுணையாயின் யாவை? கூரிய ஆயுதங்களை அன்று வடித்தவர் யார்? ஆயுதமே அறியாத காலமல்லவா அது! பக்கத்திலிருந்த கூரிய கற்களை அவன் தனக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டான். கூரிய கற்களை வீசிக் காய்களை வீழ்த்தினான்; ஓடிய விலங்கை அடித்தான், பறக்கும் பறவையைப் படுத்தான். இப்படியே அவனுடைய முதல் தொழில் தொடங்கிற்று. இதையே வரலாற்று ஆசிரி யர்கள் - ‘முதல் கற்காலம்’ என்று வரலாற்று எல்லையிட்டுப் பேசுகின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/26&oldid=1381355" இலிருந்து மீள்விக்கப்பட்டது