பக்கம்:தொழில் வளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தொழில் வளம்

‘ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே
ஆணைசெலவே நினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து இரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாகவே இனும் காயகற்பங் தேடி
நெஞ்சு புண் ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவது மாக முடியும்’

என்று காட்டி மனித வாழ்வின் அடிப்படைத் தேவையினையும் அதனைக்கொண்டே பிற தேவைகளை வளர்த்துக்கொண்டு மனிதன் எங்கெங்கோ ஒடுவதையும் காட்டி நகைக்கின்றார். இன்றைய உலகம் அவரது பாட்டுக்குச் சான்றாகவன்றாே எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது! அதே வேளையில் அடிப்படைத் தேவையாகிய பசிதீர உண்ணும் நிலை மக்கள் எல்லோருக்கும்-உயிரினம் அனைத்துக்கும்-நிறைவேறவில்லை என்பதையும் காண்கின்றாேம். மக்கள் வாழ்வில் ஏற்றத் தாழ்வே இவற்றை வளர்க்கின்றது. எனவே, சமதர்மச் சமுதாயமே உலகுக்குத் தேவையென்று அரசியல் அறிந்தவரும் பொருளியல் நிபுணர்களும் கூக்குரலிடுகின்றனர். ஆனால் அவர் தம். பேச்சுக்கள் அனைத்தும்,

‘வணிகமும் பொருள்நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்,
துணியுமாயிரம் சாத்திரம் கற்கினும்
சொல்லுவார் எள்துணைப் பயன் கண்டிலார்,’

என்று பாரதியார் காட்டுவது போன்று பயனின்றியே கழிகின்றன. அதனாலேதான் நாடுகள்தோறும் இனப்போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும் நிகழ்வ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/25&oldid=1382179" இலிருந்து மீள்விக்கப்பட்டது