பக்கம்:தொழில் வளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்வின் தேவை

21


உணவினைக் கடையிலே விற்பனைக்கு வைப்பவன் ஏன் அப்படிச் செய்கிறான்? உயிரைக் கொன்று கடைகளில் விற்பது பாவமல்லவா? இவற்றை வினாவாக எழுப்பி அவற்றிற்கு விடையும் காண்கின்றார் வள்ளுவர். உண்மையில் அந்தப் பாவத்துக்கு உரியவர் அதை வாங்கி உண்பவரேயன்றிக் கொன்றவ ரல்லர் என்பது அவர் துணிவாக இருக்கலாம் என அவர் குறள் நமக்கு உணர்த்துகின்ற தன்றோ!

‘தினற்பொருட்டாற் கொல்யா துலகெனில் யாரும்

விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்’ (குறள் : 256)

என்று திருவள்ளுவர் கூறுவதன் கருத்தென்ன? மனிதன் தான் தின்பதற்காகத் தேவையான உயிர்களைக் கொல்லத் தொடங்கவே அவற்றைக் கொன்று விற்றுப் பொருள் பெருக்க வணிகர் தலைப்பட்டனர் என்பர். எனவே மனிதன் தேவைதான் தொழில் உலகிலும் வாணிப உலகிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இதையே இன்றையப் பொருளியல் அறிஞர்கள் (Eeonomist) தேவையும் பெறுதலும் (Demand & Supply) என்று கூறுகின்றனர். இந்த இலக்கண முறைகளும் கணக்குகளும் ஆதி மனிதன் அறியாதன. இருபதாம் நூற்றாண்டின் மனிதன் வாழ்வின் தேவையை எல்லையற்றுப் பெருக்கிக்கொண்டு அதற்கேற்பத் தொழில் துறைகளையும் பிறவற்றையும் பெருக்கிக்கொண்டே அதே வேளையில் ஒருவரை ஒருவர்-ஓரினத்தை ஓரினம் -ஒரு நாட்டை ஒரு நாடு வீழ்த்தி அழிக்கும் வகையிலே-முன்னேறிக்கொண்டே இருக்கிறான். ஆனால் ஆதி மனிதனுக்கு இந்தத்-தேவை, குறித்த அளவில் நின்று விட்டது. பின்னால் மனிதன் தன் தேவையையும் அதன் வழி ஆசையையும் பெருக்கிக்கொண்டதைப் பார்த்துச் சமயத் தலைவராகிய தாயுமான அடிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/24&oldid=1381922" இலிருந்து மீள்விக்கப்பட்டது