பக்கம்:தொழில் வளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தொழில் வளம்


கொண்டை கொண்டு நடப்பதும் இத்தகைய ஈர்ப்புச் சக்திக்காகவே என்பர் ஆய்வாளர். எனவே ஆண் பெண் கலந்து இனப்பெருக்கம் செய்யும் வாழ்வு உயிரினத்தின் அடிப்படை வாழ்வாகவே அமைந்துள்ளமையைக் காண்கின்றாேம். எனவே விலங்கினத்திலிருந்து, பிரிந்த மனிதனுக்கு இவ்வுணர்வு இயற்கையிலேயே அமைந்துவிட்டது என்பதில் வியப்பில்லையல்லவா! எனவே அதை வாழ்வின் தேவை என்னாது வாழ்வு அந்த இனப் பெருக்கத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என்ற முடிவிலே நாம் மேலே செல்லலாம்.

வயிற்றுப் பசி எல்லோருக்கும் உண்டு. அதுதான் முதல் மனிதனுக்கும்.இன்றைய இருபதாம் நூற்றாண்டின் மனிதனுக்கும் பொதுவாக உள்ள தேவையாக அமைகின்றது. ஆதி மனிதன் அந்த வயிற்றுப் பசியை விலங்குகளைப்போலத் தணித்துக்கொண்டிருந்திருப்பான். ஏதோ கண்டகண்ட காய்கனி கிழங்கு முதலியவற்றையும் விலங்குகளின் மாமிசத்தையும் அப்படியே உண்டு உண்டு அவன் கழித்த ஆண்டுகள் அளவிறந்தன. அந்த உணவுப் பொருள்கள் தேவையான அளவு கிடைக்காத காலத்திலேயே அவன் எண்ணம் உணவு தேடவேண்டும் என்று தூண்டியிருக்கும். அப்பொழுதே அவனுடைய முதற்றாெழில் தொடங்கியிருக்க வேண்டும். ‘தொழில் உலகம்’ என்று இந்த நூற்றாண்டில் நாம் நம் இருபதாம் நூற்றண்டு உலகத்தையும் ‘தொழில் யுகம்’ என்று நம் காலத்தையும் போற்றுகின்றாேம். அதற்கேற்றபடி இன்று உலகெங்கணும். எண்ணற்ற தொழில்கள் உண்டாகின்றன. அவை அனைத்தும் மனித வாழ்வின் தேவைக்கே பயன்படுகின்றன. சாதாரண உணவினை முன்னிறுத்தி இவ்வுண்மையை வள்ளுவர் விளக்கிவிட்டார். மாமிச-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/23&oldid=1381919" இலிருந்து மீள்விக்கப்பட்டது