பக்கம்:தொழில் வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

19


உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களுக்கும் தனித்தனியே பசி உணர்வும், பருக வேண்டுமென்ற அவாவும் உண்டு என்பதை அறிவோம். ஆதி மனிதனுக்கு அப்புலன்கள் ஐந்தும் இருந்தாலும் அவை திறம்படத் தொழிலாற்றாத காரணத்தாலோ ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாத காரணத்தாலோ எல்லாப் புலநுகர்வுகளுக்கும் அவன் போதிய முதலிடம் கொடுக்கவில்லை. ஓரறிவுயிராகிய புல் தொடங்கி எல்லா உயிரினமும் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆகவே அவை அனைத்தும் உணர்வற்றவை என்றோ ஆண் பெண் உணர்ச்சி அற்றவையென்றோ யார் சொல்ல முடியும்? ஓரறிவுயிராகிய தாவர இனத்திலே அந்த உணர்வைப் பெருக்கும் வகையிலேயே வண்ண மலர்களும் பல்வேறு மகரந்தப் பொடிகளும் தோன்றிச் சிறக்கின்றன என்று அத்துறையில் வல்ல விஞ்ஞானிகள் அழகுற எடுத்துக்காட்டியுள்ளனரே! அப்படியே. அறிவு வளரவளர ஆண் பெண் சேர்க்கைக்குரிய வாய்ப்புக்களை இயற்கையோ அன்றி இறையோ வாரி வாரி அளிப்பதைக் காண்கின்றோம். வீட்டில் வளரும் சிட்டுக்குருவியாகிய வீட்டுக்குருவி இனத்தில் ஆண் பெண் கலந்து மகிழ்ந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதைக் காண்கின்றோம் நாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தோற்றத்திலேயே வேறுபாடுகளை அமைத்துஒன்றற்கிருக்கும் திறன், செயல்நிலை, வண்ணம் முதலியவற்றை மற்றொன்றிற்கு இல்லையாகச் செய்துஒன்றை ஒன்று விரும்பும் வண்ணம் இயற்கையிலேயே அவற்றை அமைத்திருக்கும் திறன் போற்றக்கூடியதன்றோ!

மயில்களில் ஆண்கள் தோகையொடு பொலிவதும், களிறுகள் தந்தம் பெற்றுச் சிறப்பதும், சேவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/22&oldid=1381964" இலிருந்து மீள்விக்கப்பட்டது