பக்கம்:தொழில் வளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தொழில் வளம்


எத்தனையோ விலங்குகள் அந்த நிலையில் இன்றும் வாழ்வதைக் காண்கின்றோம். அந்த முதல் மனிதன் அப்படியே இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு காணாது ‘யான், எனது’' என்ற பற்றோ உரிமையோ காணாது எப்படியோ விலங்கொடு விலங்காக வாழ்ந்து வந்தான். எனவே அவனுக்கு ‘வேண்டியது எது? வேண்டாதது எது?’ என்பன புரியாதன. ஏதோ விலங்குகளைப் போன்று வயிற்றுப் பசிக்குப் பழத்தையோ காயையோ அன்றி மாமிசத்தையோ உண்டு ‘அதுவே முடிவு’ என்ற உணர்வில் அவன் வாழ்ந்து வந்தான். அவன் தேவை அத்துடன் நிறைவேறிற்று. எனவே அந்நிலையில் வீடும் வாயிலும் நாடும் நகரும் உடையும் அணியும் வாகனங்களும் விண்வெளிப் பயணமும் பிற இன்றைய மனிதனுடைய தேவைகளும் அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை யல்லவா! இப்படித் தேவையே இன்னதென அறியாத மனிதநிலையிலிருந்துதான் இந்த இருபதாம் நூற்றாண்டில் எல்லாத் தேவைகளையும் பெருக்கிக்கொண்டு, பெறமுடியாத நிலையில் அல்லும் பகலும், ஓய்வின்றி உழைக்கும் ‘நாகரிக மனிதன்’ உருவானான். ஆனால் அவனுக்கும் இவனுக்கும் உள்ள இடைவெளி அதிகம் எல்லையில்லாதது. இந்த நீண்ட் கால எல்லையில் அவன் தேவைகளும் அத்தேவைகளுக்கேற்ற செய்பொருள்களும் அச்செய்பொருள்களை ஆக்கும் தொழில் வகைகளும் எவ்வெவ்வாறு பல்கிப் பெருகின என்பதை எண்ணிப் பார்த்தல் இன்றியமையாததாகும். அவ்வாறு ஆராயும்போது ‘தேவை’ மனிதனை எந்தெந்த வகையில் ஈர்த்துச் செல்லுகிறது என்பதையும் அறிய முடிகின்றதல்லவா!

முதற்கால மனிதனுக்கு ஆடை கிடையாது. அவனது முதல் தேவை பசி நீக்கமே. கண்டு, கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/21&oldid=1381960" இலிருந்து மீள்விக்கப்பட்டது