பக்கம்:தொழில் வளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

2 வாழ்வின் தேவை



“எனை நான் என்ப தறியேன், பகல் இரவாவதும் அறியேன்” என்று மாணிக்கவாசகர் தம்மை மறந்த நிலையில் ஆண்டவனைப் பாடும்போது கசிந்து உருகுகின்றார். அந்த முதற் காலத்தில் வாழ்ந்த மனிதன் நிலையும் இத்தகையதே. தன்னை இன்னானென அறிந்து கொள்ள முடியாது- அறிந்து கொள்ள நினையாது தான் வளர்ந்து வந்த உயிரினத்தினின்று வேறுபட்ட போதிலும் அதை எண்ணிப் பார்க்காது விலங்கொடு விலங்காக வாழ்ந்த அந்த ஆதி மனிதன் எதையும் எண்ணிப் பார்க்கவில்லை; பார்க்க நினைத்தால் அவனால் அது முடியாத ஒன்று. அவனுக்கு இரவு பகல் என்ற வேறுபாடு கிடையாது. ‘ஏதோ வெளிச்சம் இருக்கிறது; எதிரில் உள்ள பொருள் தெரிகின்றது என்ற நினைப்பில் பகலில் ஓடி ஆடி உணவு தேடியும், இருட்டில் ஒன்றும் செய்ய முடியாத் காரணத்தால் இரவில் ஓரிடத்தே தங்கியும் அவன் வாழ்ந்தான். காட்டிலும் நாட்டிலும்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/20&oldid=1398203" இலிருந்து மீள்விக்கப்பட்டது