பக்கம்:தொழில் வளம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

269


அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தொழிற் சாலையில் உப பொருளாக வரக்கூடிய குளோரின் வாயுவைப் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமும் பரிசீலனையில் இருந்துவருகிறது. இத் திட்டம் உருவானால், பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதற்கு மூலப் பொருளாக உள்ள,பி.வி. சி. என்ற இரசாயனப் பொருளை வருடம் ஒன்றுக்கு 10,000 டன் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும். தாழையூத்தில் வருடம் ஒன்றுக்கு 10,000 டன், கால்சியம் கார்பைட் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு உற்பத்தி ஆரம்பமாகியிருக்கிறது. மேட்டுரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர், குளோரின் திரவம் ஆகிய இரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இயந்திரக் கருவிகள் செய்யும் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். கோயம்புத்துர் மாவட்டத்திலும், சென்னை நகர்ப்புறத்திலும் பல முக்கிய என்ஜினியரிங் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவைகள் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு நல்ல முறையில் உதவி வருகின்றன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நம்முடைய மாநிலத் தொழில்களை நடத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட் கம்பெனிகளின் எண்ணிக்கை 908. அவைகளில் 66 பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளாகவும், 842பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாகவும் உள்ளன. பப்ளிக் லிமிட்டெட் கம்பெனிகளுக்காக மொத்தம் அனுமதிக்கப்பட்ட பங்குத்தொகை 53.36கோடிருபாய், அதில் செலுத்தப்பட்ட பங்குத்தொகை 4.53 கோடி (ருபாய், 842 பிரைவேட் கம்பெனிகளுக்கு அனுமதிக்கப்பட்ட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/272&oldid=1382243" இலிருந்து மீள்விக்கப்பட்டது