பக்கம்:தொழில் வளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தொழில் வளம்


பங்குத் தொகை 106.68 கோடி ரூபாய். செலுத்தப்பட்ட பங்குத் தொகை 42.64 கோடி ரூபாய். இந்தப் புள்ளி விவரங்கள் நம் மாநிலத்திலே ஏற்பட்டிருக்கக்கூடிய தொழில் வளர்ச்சியை ஒரளவுக்கு விளக்கிக் காட்டுகின்றன. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி போதிய அளவிற்கு ஏற்பட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரம் நன்கு உயரவேண்டு மென்று சொன்னால் இதைவிடப் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படுவது அவசியம். ஆகவே மேலும் தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கான திட்டங்கள் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது அத்தியாவசியமாகிறது.

தொழிற் கல்வி

நம் மக்களிடையே தொழில் நுட்ப அறிவும், தொழில் திறமையும் பெருகுவதுதான் இந்தத் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படை. சென்ற பத்தாண்டுகளில் இந்த அறிவையும், திறமையையும் வளர்ப்பதற்குத் தொழில் நுட்பக் கல்வித் துறையில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதன் பயனாக இப்போது வருடம் ஒன்றுக்கு 1.157 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல தொழில் பள்ளிகளில் வருடம் ஒன்றுக்கு 2,910 மாணவர்கள் சேர இடவசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மூன்றாவது திட்டக் காலத்திலும் அதைத் தொடர்ந்து நான்காவது திட்டக் காலத்திலும் நமக்கு வேண்டிய பட்டப்படிப்புப் பெற்ற பொறியாளர்களையும், ‘டிப்பளமா’ பெற்றவர்களையும் கணக்கெடுப்போமானால் பற்றாக்குறை ஏற்படும் என்றுதான் தோன்றுகிறது. ஆகவே பொறியியல் கல்லூரிகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/273&oldid=1382073" இலிருந்து மீள்விக்கப்பட்டது