பக்கம்:தொழில் வளம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

271


இன்னும் அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. மூன்றாவது திட்டக் காலத்தில் ஒரு பிராக்தியப் பொறியியல் கல்லூரியையும், தனியார் துறையில் இன்னொரு பொறியியல் கல்லூரியையும் ஆரம்பிப்பதெனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் வருடம் ஒன்றுக்கு 120 மாணவர்கள் சேர்க்கப்படுவதற்குப் பதிலாக 180 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் வருடம் ஒன்றுக்கு 250 மாணவர்கள் சேருவதற்கு வசதி செய்யப்படும். இந்த முறையில் மூன்றாவது திட்ட முடிவிற்குள் பொறியியல் கல்லூரிகளில் வருடம் ஒன்றுக்கு 1767 மாணவர்கள் சேர்க்கமுடியும். பல தொழிற் பள்ளிகளில் இப்போது இருப்பதைவிட மேலும் 700 பேர் சேருவதற்கான வசதிகள் செய்யப்படும். முன்றாவது திட்டக் காலத்தில் தொழில் நுட்பக் கல்விக்காக 6.5 கோடி ரூபாய் செலவு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது திட்டக் காலத்தில் தொழில் நுட்பக் கல்விக்கு ஒதுக்கிய தொகை 337 கோடி ரூபாய். பொறியியல் துறையில் பெரிய அளவில் மேல்படிப்பு போதிப்பதற்குரிய வசதிகளுடன் இந்தியத் தொழில் நுட்பக் கழகம்(இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்லைஜி) மத்திய சர்க்காரால் கிண்டியில் அமைக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. அதற்கான கட்டடங்கள் துரிதமாகக் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு வேண்டிய உதவியை அளிக்க மேற்கு ஜெர்மன்சர்க்கார் முன்வந்துள்ளார்கள். மேற்கு ஜெர்மன் நிபுண்ர்களும் பேராசிரியர்களும் இந்தத் தாபனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தாபனத்தின் மூலம் பொறியியல் துறையில் நல்ல முன்னேற்றங்கள் காண்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/274&oldid=1382074" இலிருந்து மீள்விக்கப்பட்டது