பக்கம்:தொழில் வளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தொழில் வளம்


எழுந்திருந்திருக்கும். அந்த உணர்விலேயே அவன் மனிதனானான். உணவு உயிரினங்கள் அனைத்துக்கும் தேவை; ஆனால் உடை மனிதனுக்கு மட்டும் தேவை" எனவே அந்த உடை உணர்வே அவனை மனிதனாக்கியது. அந்த உடை உணர்வே இன்று கோவை, மதுரை போன்ற தமிழ்நாட்டு நகரங்களையும், பம்பாய், ஆமதாபாத் போன்ற வடநாட்டு நகரங்களையும் பிற வெளிநாட்டு ஆலை நகரங்களையும் செல்வவளம் கொழிக்கச் செய்கிறது என்பது உண்மையன்றோ !

முதல் மனிதனுக்கு மட்டுமன்றி இன்றை மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் உணவும் உடையும் தாமே. இவற்றைத் தமிழ்நாட்டுப் புலவர்கள் மிக எளிமையாக உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பள்ளிப் பிள்ளைகளும் எளிமையாகப் பயிலும் வண்ணம் ஔவையார்,

“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடி நினைந் தெண்ணுவன” (நல்வழி : 28)

என்று கூறி, இந்த இரண்டிலும் உணவு முதற்படி என்பதைக் காட்டி, இந்த இரண்டும் உலகில் வாழும் எல்லோருக்கும் அடிப்படைத் தேவையெனவும் அதை எண்ணி எல்லோரும் இந்த அடிப்படைத் தேவையைப் பெற முயலாது, முன்னணியில் செல்பவர்கள் எதை எதையோ எண்ணி எண்ணிச் சஞ்சலப்பட்டு உலகுக்கு அலக்கண் உறச் செய்கிறார்கள் எனக் காட்டுகின்றார். இவை இரண்டும் உலகில் எல்லோருக்கும் அமைந்து விட்டால் பிற வேறுபாடுகள் உலகில் இருந்தாலும் அதிகமாகத் தெரியாது என்பதே அவர்கள் கருத்து. இதைத்தான் இன்றைய அரசியல் தலைவர்கள், ‘உழைப்பவன் உண்ணவும் உடுக்கவும் வசதி இன்றிப் பட்டினி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/29&oldid=1381372" இலிருந்து மீள்விக்கப்பட்டது