பக்கம்:தொழில் வளம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தொழில் வளம்


வந்ததும் மக்கள் அவற்றின் தரத்தை அன்றே மதிப்பிட்டு விடுவதையும் காண்கின்றாேம். படத் தொழிலும் இன்று தமிழ்நாட்டுத் தொழில் துறையில் முக்கிய இடம் வகிக்கின்றது. படத்திற்கு வேண்டிய மூலப்பொருளை (Raw film) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றும் நம் நாட்டில் (உதகை) தொடங்க இருக்கின்றது. சென்னையிலுள்ள கோடம்பாக்கம் இத் தொழில் சிறப்பை நமக்கு நன்கு அறிமுகப்படுத்துகின்றது. இத்தகைய படத் தொழிலில் புகும் பலர் நிலை கெடுவதைக் காண்கின்றாேம். அவற்றின் காரணங்களை இங்கே ஆய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. ஆயினும் அவர்தம் விளம்பரங்களில் உண்மையில்லையாயின் அவர்களுக்குக் கேடு உண்டாவதை மட்டும் இங்கே எண்ணல் வேண்டும்.

விளம்பரம் வியாபாரத்திற்கு முக்கியமானது. மேலை நாடுகளில் இந்த நல்ல உண்மையை உணர்ந்து அதற்கென அதிகப் பணம் செலவு செய்கின்றனர். ஆயினும் பெரும்பாலான பொருள்கள் விளம்பரத்துக்கு ஏற்ற வகையில் நல்லனவாகவும் திண்ணியதாகவும் சிறந்ததாகவும் அமைகின்றன. எனவே விற்பனையும் பெருகுகின்றது; இலாபமும் அதிகமாகின்றது; தொழிலும் வளம் சிறக்கின்றது. ஆனால் பொருளின் தரத்தைக் குறைத்து விளம்பரத்தால் மட்டும் வாணிபத்தைப் பெருக்க நினைப்பார்களானால் அவ்வெண்ணம் தவறாகவே முடியும். விளம்பரம் நல்ல வகையில்உண்மை நிலையில் - பயன்படுவதே நாட்டுக்கு நல்லதாகும். இன்று நாட்டில் எத்தனையோ வகையான விளம்பரங்களைக் கண்டு ஒன்றுமறியாத மக்கள் ஏமாந்து நிற்பதைக் காண்கின்றாேம். அப்படியே அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/299&oldid=1381843" இலிருந்து மீள்விக்கப்பட்டது