பக்கம்:தொழில் வளம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

297


வாறு விளம்பரம் செய்து ஏமாற்றுபவர்கள் பிடிபட்டோ அன்றி முதல் இழந்தோ வாழ்விழப்பதையும் காண்கிறோம். எனவே நல்ல வகையில் பொருள்களை உற்பத்தி செய்து அவற்றை நல்லபடி சந்தைகளில் விற்பனை செய்ய நல்ல முறையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதுவே உள்நாட்டு வெளிநாட்டு வாணிப வளனைப் பெருக்குவதோடு நாட்டில் தொழில் வளரவும் நன்கு உதவியாக அமையும் என்பது ஒருதலை.

பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் வாங்குபவர்களையே உள்ளத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கேற்பப் பொருள்களை உற்பத்தி செய்யாது வாங்கும் மக்களின் விருப்பம், சுவை, மாற்றம், தேவை, பழக்கவழக்க முறை இவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். சாதாரண விளையாட்டு வேடிக்கைப் பொருள்கள் தொடங்கி உயர்ந்த கனரகத் தொழிற்சாலையில் உருவாகும் பொருள்கள் வரை இந்த அடிப்படையினையே கொண்டவையாக வேண்டும். இந்த அடிப்படைதான் ‘தேவைக்கு ஏற்ற உற்பத்தி’ என்ற கொள்கைவழி நாட்டில் வாணிபத்தையும் தொழில் வளத்தையும் பெருக்கும்.

ஒரு தொழிற்சாலை ஒரே பொருளைப் பல ஆண்டுகளாக ஒரே நிலையில் உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் அது சிறந்ததாகப் போற்றப்படத் தக்கதே. ஆயினும் கால வேறுபாடுகளுக் கிடையில் மக்கள் மன மாற்றத்துக்கு ஏற்ப அப்பொருளைப் பயன்படுத்துமுறை மாறுபடுமானால், அதற்கேற்பவே அப் பொருள் பெருக்கம் அமைய வேண்டும் உதாரணமாக ஆடைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/300&oldid=1381856" இலிருந்து மீள்விக்கப்பட்டது